5 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது பார்க்ளே வங்கி

– நமது நிருபர்-

பிரிட்டன் தலைநகர் லண்டனை தலைமையிடமாக கொண்டு நிதி சேவை மற்றும் வங்கித்துறையில் ஈடுபட்டுள்ளது பார்க்ளே.

இங்கிலாந்து மட்டுமின்றி, அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிலும் இதன் கிளைகள் உள்ளன.

இந்நிலையில், 5 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கப்போவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே ஆயிரம் பேரை நீக்கிவிட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 4 ஆயிரம் பேரை நீக்கவும் திட்டமிட்டு வருகிறது. இந்த எண்ணிக்கை மொத்த பணியாளர்களில் சுமார் 5 சதவீதம். செயல்பாடு மற்றும் ஆதரவுத்துறைகளை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.

அந்த வங்கியின் தலைமை அதிகாரி சிஎஸ் வெங்கடகிருஷ்ணன் கூறுகையில், வங்கி செயல்பாடுகளை எளிமைப்படுத்தி மேம்படுத்தவும், தொழில்நுட்பத்தில் முதலீடு காரணமாக பணி நீக்கம் நடக்கிறது. வணிகத்தில் ஏஐ முக்கிய பங்கு வகிக்கும். ஆனால், பணி நீக்கத்திற்கு அது மட்டுமே காரணம் இல்லை. ஏஐயை பெரிய அளவில் பயன்படுத்துவோம். அதன் பலனை பெற அதற்கான உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றார்.

Source link