72-வது தேசிய விருதுகள்: சிறந்த திரைப்படத்துக்கான விருதைப் பெற்ற தனுஷின் 'ராயன்'

இந்தியாவில் உள்ள பல்வேறு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருதுகள் இந்திய அரசால் வழக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2024-ம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கான 72- வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில், தமிழில் ஆவணப்படத்துக்கான சிறந்த ஒலி வடிவமைப்பு ஹரிஹரசுதனுக்கு ‘ப்ளு’ படத்திற்காக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மெய்யழகன் – சினிமா விமர்சனம்

தொடர்ந்து ‘மெய்யழகன்’ படத்துக்கு சிறந்த ஒலிக்கலவைக்கான விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ படத்திற்கு சிறந்த தமிழ் படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சிறப்பு பிரிவில் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்துக்கும் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. ‘அமரன்’ படத்துக்காக சிறந்த பின்னணி இசைக்கான விருது ஜி.வி பிரகாஷிற்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சிறந்த படத்தொகுப்புக்கான தேசிய விருதையும் ‘அமரன்’ படம் தட்டி சென்றிருக்கிறது. ‘புஷ்பா’ 2 படத்துக்கு சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருது வழங்கப்பட்டிருக்கிறது.

தகவல்கள் தொடர்ந்து அப்டேட் செய்யப்படும்!

Source link