நியூயார்க்: கடந்த 1952ல் அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்து நொறுங்கிய, ‘பேன் ஆம்’ பயணியர் விமானத்தின் பாகங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் தன்னாட்சி பிரதேசமான போர்ட்டோ ரிகோவின் சான் ஜுவான் நகரில் இருந்து, 69 பேருடன் நியூயார்க் சென்ற இந்த விமானம் மாயமானது. விமான எஞ்சின்கள் செயலிழந்து அட்லாண்டிக் கடலில் விழுந்து மூழ்கியது.
நீண்ட தேடுதலுக்குப் பின், அட்லாண்டிக் பெருங்கடலில் 2,000 அடி ஆழத்தில் விமானத்தின் இறக்கை உள்ளிட்ட பாகங்கள் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
