அதில், “ 1. பஞ்சாயத்து பிரதிநிதிகளின் ஊதியத்தை கணிசமாக உயர்த்துதல்:
கிராமப்புற மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்புகளைக் கருத்தில் கொண்டு, பஞ்சாயத்து தலைவருக்கு ₹16,000, துணைத் தலைவருக்கு ₹10,000 மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு ₹8,000 என மாதாந்திர ஊதியத்தை உயர்த்த வேண்டும்
2. உள்ளூர் டாஸ்மாக் கடைகள் குறித்து கிராம சபைக்கு இறுதி அதிகாரம் அளித்தல்:
கிராமங்களில் இருக்கும் அல்லது புதிதாகத் திறக்கப்படும் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு எதிராக கிராம சபை தீர்மானம் நிறைவேற்றினால், அதற்கு முன்னுரிமை அளித்து அக்கடைகளை மூடும் அல்லது தடுக்கும் அதிகாரத்தை வழங்க வேண்டும்.
3. விழிப்புணர்வு மற்றும் பங்கேற்பை அதிகரித்தல் (மாதிரி கிராம சபைகளை நேரலை செய்தல்) :
கிராம சபையின் முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்வதுடன், மாதிரி கிராம சபை கூட்டங்களை முதலமைச்சர், அமைச்சர்கள் முன்னிலையில் தொலைக்காட்சிகளில் நேரலை செய்ய வேண்டும்.
4. கிராம சபை தீர்மானங்களை முறையாகச் செயல்படுத்துவதை உறுதி செய்தல் :
கிராம சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மீது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை (Action Taken Report) பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
5. கிராம சபை நிகழ்ச்சி நிரலில் (Agenda) குடிமக்களுக்கு கூடுதல் உரிமை வழங்குதல் :
கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலை முன்கூட்டியே அறிவிப்பதுடன், பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான முக்கியப் பிரச்சினைகளை விவாதப் பட்டியலில் சேர்க்க எளிய வழிமுறையை உருவாக்க வேண்டும்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/09/06/cm-vijay-chair-1-2026-09-06-17-03-48.jpg)
6. உள்ளூர் நிர்வாகத்தில் திறன் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சியை வலுப்படுத்துதல் :
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு மாநில ஊரக வளர்ச்சி நிறுவனம் (SIRD) மூலம் வழங்கப்படும் பயிற்சிகளை மேம்படுத்தி, தன்னாட்சியுடன் கூடிய வலுவான ஆராய்ச்சி கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
7. கிராம வளர்ச்சித் திட்டமிடலில் மக்கள் பங்கேற்பை நோக்கிய நகர்வு :
வெறும் அரசு திட்டங்களை மக்களுக்குத் தெரிவிக்கும் இடமாக இல்லாமல், குடிநீரேற்றம், சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்வாதாரம் போன்ற தங்களின் தேவைகளை மக்களே முன்னுரிமைப்படுத்தி கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டத்தை (VPDP) வடிவமைக்க அனுமதிக்க வேண்டும்.
8. அடிமட்ட அளவிலான பொறுப்புக்கூறல் கலாச்சாரத்தை உருவாக்குதல் :
கிராம சபை என்பது சட்டப்பூர்வமான ஒரு கூட்டமாக மட்டும் இல்லாமல், பொதுமக்கள் தங்களது உள்ளூர் நிர்வாகத்தைக் கேள்விக் கேட்டு, பொறுப்புடன் வழிநடத்தும் ஒரு தன்னாட்சி தளமாக மாற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
