கர்நாடகாவில் வறட்சி; குடிநீருக்கு தட்டுப்பாடு: மத்திய அரசிடம் உதவி கேட்க முதல்வர் முடிவு

பெங்களூரு: கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை ஏமாற்றியதால், கடும் வறட்சி நிலவுகிறது. இதையடுத்து, ”மழை பற்றாக்குறை உள்ள, 178 தாலுகாக்களுக்கு குடிநீர் வசதிக்காக, கூடுதலாக ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும்,” என, முதல்வர் சிவகுமார் அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில், நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து போனது. இதனால், முக்கிய அணைகள் நீரின்றி வறண்டு, பல மாவட்டங்களில் குடிநீருக்கே கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்நிலையில், பெங்களூரு விதான் சவுதாவில் மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட தலைமை செயல் அதிகாரிகளுடன் காணொளி மூலம் முதல்வர் சிவகுமார், துணை முதல்வர் பரமேஸ்வர் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

அப்போது முதல்வர் பேசியதாவது:

மாநிலத்தில் 178 தாலுகாக்களில் மழை பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு தாலுகாவிற்கும், குடிநீருக்காக கூடுதலாக, ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும்.

மழையின் அளவு, அணையில் தேங்கி உள்ள நீரின் அளவை பொறுத்து, விவசாய பணிக ளை தொடர வேண்டும். கலெக்டர்கள், மாவட்ட தலைமை செயல் அதிகாரிகள் விவசாயிகளுடன் தொடர்பில் இருந்து, அவர்களுக்கான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.

அடுத்த, 15 நாட்களுக்குள் வறட்சி நிலவரம் குறித்த அறிக்கையை, மத்திய அரசிடம் சமர்ப்பி த்து உதவி கேட்க வேண்டும். இது தொடர்பாக விரிவான அறிக்கையை கலெக்டர்கள் தயார் செய்து அனுப்ப வேண்டும்.

புதிய ஆழ்துளை கிணறுகள் தோண்டும்போது, அதை காணொளியாக பதிவு செய்ய வேண்டும். ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டதாக யாராவது கூறினால், அதை நம்பாதீர்கள். கிணறு தோண்டாமல் தோண்டப்பட்டதாக கூறியதை கண்டுபிடித்தால், அதற்கு மாவட்ட கலெக்டர்களே பொறுப் பு .

இவ்வாறு அவர் பேசினார்.

***

Source link