ரயில் பயணிகள் கவனத்திற்கு: சென்னையில் ஆகஸ்ட் 1 வரை இந்த வழித்தடத்தில் மின்சார ரயில்கள் ரத்து

சென்னை சென்ட்ரல் (மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ்) – கூடூர் ரயில் பாதையில் இருவேறு இடங்களில் முக்கிய பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை பல புறநகர் மின்சார ரயில்கள் (EMU) மற்றும் மெமு (MEMU) ரயில்கள் ரத்து மற்றும் பகுதி ரத்த செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கவறைப்பேட்டை – கும்மிடிப்பூண்டி இடையே வழித்தட பராமரிப்பு மற்றும் மின்சாரப் பாதை சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாகப் பின்வரும் ரயில்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன:

பகுதி ரத்து செய்யப்படும் மின்சார ரயில்கள்:

இரவு ரயில்கள் (ஜூலை 21, 23, 27, 29 மற்றும் 31): மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கிச் செல்லும் நள்ளிரவு நேரப் புறநகர் மின்சார ரயில், பொன்னேரி – கும்மிடிப்பூண்டி இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் பொன்னேரி வரை மட்டுமே இயங்கும்.

அதிகாலை ரயில்கள் (ஜூலை 22, 24, 28, 30 மற்றும் ஆகஸ்ட் 1): கும்மிடிப்பூண்டியில் இருந்து மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் நோக்கிச் செல்லும் அதிகாலை நேரப் புறநகர் ரயில், கும்மிடிப்பூண்டியில் இருந்து புறப்படாமல் பொன்னேரியில் இருந்து மூர் மார்க்கெட் வரை மட்டுமே இயங்கும்.

முழுமையாக ரத்து செய்யப்படும் மெமு ரயில்கள்

மேலும், பெடபரியா – நாயுடுபேட்டை இடையே ஜூலை 23, 25, 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 6 மணி நேர வழித்தட மற்றும் சிக்னல் பராமரிப்புப் பணிகள் (Line & Signal Block) நடைபெற உள்ளன. இதன் காரணமாகக் கீழ்வரும் 5 மெமு ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் – சூளூர்பேட்டை மெமு

சூளூர்பேட்டை – நெல்லூர் மெமு

நெல்லூர் – சூளூர்பேட்டை மெமு

சூளூர்பேட்டை – மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் மெமு

மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் – ஆவடி மெமு

எனவே, இந்த வழித்தடத்தில் பயணிக்கும் பயணிகள் ரயில்வேயின் இந்த தற்காலிக மாற்றங்களைக் கவனித்து, அதற்கு ஏற்ப தங்களது பயணங்களைத் திட்டமிடுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.

Source link