பிரிட்டனில் இருந்து கார் இறக்குமதி விண்ணப்பிக்க அரசு அழைப்பு

புதுடில்லி:இந்தியா – பிரிட்டன் விரிவான வர்த் தக ஒப்பந்தத்தின் கீழ், பிரிட்டன் கார்களை சலுகை வரியில் இறக்குமதி செய்வதற்கான விண்ணப்பங்களை மத்திய அரசு வரவேற்றுள்ளது.

இது குறித்து அன்னிய வர்த்தக தலைமை இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிக்கை:

பி ரிட்டனில் தயாரிக்கப்படும் கார்களை சலுகை வரியில் இறக்குமதி செய்ய விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். முதல் கட்டமாக 9,316 கார்கள் இறக்குமதி செய்வதற்கு, ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 4 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தகுதியான நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்படும்.

ஒதுக்கப்பட்ட எண்ணிக்கைக்குள் இறக்குமதி செய்யப்படும் தகுதியான கார்கள், சு ங்க வரி சலுகை பெறும்.

Source link