காமராஜர் காலை உணவு திட்டம்: தவெக அரசு அரசாணை!

முதல்வரின் காலை உணவு திட்டத்தின் பெயரை தமிழக அரசு மாற்றியுள்ளது. பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பள்ளி குழந்தைகள் பசியின்றி பாடம் கற்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் தொடங்கப்பட்ட ஊட்டச்சத்து திட்டங்கள், வரலாற்று ரீதியாக பல்வேறு தலைவர்களால் மேம்படுத்தப்பட்டு இந்தியாவிற்கே முன்னோடி மாதிரியாக உருவெடுத்துள்ளன.தமிழ்நாட்டில் வறுமையின் காரணமாக எந்தக் குழந்தையும் கல்வி கற்காமல் போய்விட கூடாது என்பதற்காகவும், மாணவர் சேர்க்கையை உயர்த்தவும் முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் முதன்முதலில் ‘மதிய உணவு திட்டத்தை’ அறிமுகப்படுத்தினார். இத்திட்டம் கிராமப்புற மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று, பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தியது.

காமராஜர் விதைத்த இந்த முத்தான திட்டத்தை, அதைத் தொடர்ந்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களான பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தங்கள் ஆட்சி காலத்தில் மேலும் மேம்படுத்தித் திறம்படச் செயல்படுத்தினர்.

எம்.ஜி.ஆர்: இத்திட்டத்தை ‘சத்துணவுத் திட்டமாக’ விரிவுபடுத்தி, மேலும் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவை வழங்கினார்.

கலைஞர் கருணாநிதி: சத்துணவுடன் வாரத்திற்கு முட்டை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி புரட்சி செய்தார்.

ஜெயலலிதா: மாணவர்களுக்கு கலவை சாதம் மற்றும் சுவையான ஊட்டச்சத்து உணவுகளை வழங்கித் திட்டத்தை மேலும் வலுப்படுத்தினார்.

Source link