சமையல் மாஸ்டர் எடுத்த விபரீத முடிவு

தஞ்சை மாவட்டம் திருசிற்றம்பலத்தை சேர்ந்தவர் தனபால் (51). இவர் கடந்த 8 மாதங்களாக ஈரோடு சூரம்பட்டியில் உள்ள தனியார் மதுபானக்கடை பாரில் சமையல் மாஸ்டராக பணியாற்றி வந்தார்.

இவர் கடந்த 20ம் தேதி, பார் கார் பார்க்கிங் ஓரத்தில் வாயில் நுரை தள்ளிய படி படி மயக்க நிலையில் இருந்துள்ளார். அவரது அருகே மது பாட்டிலும், பூச்சிக்கொல்லி மருந்து டப்பாவும் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சக பணியாளர்கள், தனபாலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தனபால் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அவரது மனைவி செல்வி அளித்த புகாரின் பேரில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் விசாரித்தனர். அதில், தனபால் மதுவில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து அருந்தி, தற்கொலைக்கு செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link