பாட திட்டங்களை மாற்றி வருகிறோம்; அமைச்சர் ராஜ்மோகன் தகவல்

புதுச்சேரி: ”தமிழகத்தில் பாடத்திட்டங்களை மாற்றி வருகிறோம்,” என, தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசினார்.

புதுச்சேரி, அமலோற்பவம் லுார்து அகாடமி சார்பில் நடந்த, மாணவர்களுக்கான கல்வி சாதனையாளர் பாராட்டு விழாவில், தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது: தமிழகத்தில் பாடத்திட்டங்களை மாற்றி வருகிறோம். விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையை, கல்வி பாடத்திட்ட கமிட்டி தலைவராக நியமித்துள்ளோம்.

கணித பாடத்தை கதைகள் வழியே சொல்லிக் கொடுக்க வேண்டும் என, முடிவெடுத்துள்ளோம். வண்ண படங்கள், வரைபடங்கள் நிறைந்த புத்தகமாக மாற்றுகிறோம்.மாணவர்களுக்கு, வெறும் செயற்கை நுண்ணறிவு மட்டுமல்ல, இயற்கை நுண்ணறிவை கற்று கொடுப்போம். அனைவரும் ஏ.ஐ.,யை அறிமுகப்படுத்துகின்றனர்.

நாம் ஒரு படி மேலே போய், ஏ.ஐ.,-யை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என, கற்றுதர போகிறோம்.ஏற்கனவே இல்லம் தேடி கல்வி திட்டம் பல பள்ளிகளில் ஆரம்பித்துவிட்டோம். அடுத்தடுத்த வகுப்புகளுக்கு ஏ.ஐ., சேர்த்து இயற்கை நுண்ணறிவை வளர்க்கக்கூடிய விஷயங்கள் கற்றுத்தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Source link