கோவில் உண்டியல் திருட்டு விவகாரம் : “ 8 பேர் சஸ்பெண்ட்”

கோவை பெரியகடை வீதி  கோனியம்மன் திருக்கோயிலில் கடந்த 15.07.2026 அன்று உண்டியல் காணிக்கை எண்ணிக்கையின் போது ஒரு உண்டியலை மட்டும் திட்டமிட்டு திருடிய 4 ஊழியர்கள் அதனை கண்டுபிடிக்காமல் இருந்த 2 சரக ஆய்வாளர்கள், 1 செயல் அலுவலர் மற்றும் 1 உதவி  ஆணையர் ஆகியோரை கூண்டுடோடு பணியிடை நீக்கம் செய்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவு பிற்ப்பித்துள்ளார். மேலும் இவர்கள் மீது காவல்துறை வழக்கு பதியப்பட்டு விசாரணை துவங்கப்பட்டு உள்ளது. 

திருட்டில் ஈடுபட்டவர்கள் விவரம்: 

1.  பாலசுப்ரமணியன் (சீட்டு விற்பனையாளர்) 
2.  சரவணன் (அலுவலக உதவியாளர்) 
3.  பிரதிப்குமார் (திருவலகு) 
4.  கிருஷ்ணராஜ் (பூசாரி) 

அதிகாரிகள்: 

1.  ராம்குமார் (சரக ஆய்வாளர்) 
2.  உதயகுமார் (சரக ஆய்வாளர்) 
3.  குமார் (செயல் அலுவலர்) 
4.  உஷா நந்தினி  (உதவி ஆணையர்)

Source link