ஸ்ரீரங்கம் கோவில் கோபுரம் திருப்பணியை 'ஷூ' அணிந்து பார்வையிட்ட அமைச்சர்: இந்து தமிழர் கட்சி கண்டனம்

சென்னை: இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம ரவிக்குமார் அறிக்கை:

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவில் கிழக்கு கோபுர திருப்பணியை, அமைச்சர் ரமேஷ் இரண்டு நாளுக்கு முன் பார்வையிட்டார். அப்போது, அவர் ஹிந்து சமய நம்பிக்கை மற்றும் உணர்வுகளை புண்படுத்தும் வகையில், அதிகார எண்ணத்தில், காலில், ‘ஷூ’ அணிந்து பார்வையிட்டது கண்டிக்கத்தக்கது.

பொறுப்பு மிக்க அமைச்சர் செய்தது, துளியும் ஏற்றுக் கொள்ள இயலாது. இதற்கு அமைச்சர் ரமேஷ் பொதுவெளியில் மன்னிப்புக்கு கோர வேண்டும். ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம், இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.

அதேபோல், கரூர் இனாம் நிலங்கள் தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், ‘இந்நிலங்கள் கோவில்களின் பெயரில் இல்லை’ என்ற அமைச்சரின் கருத்து ஏற்க முடியாதது. இந்த கருத்துக்கு தார்மிக பொறுப்பேற்று, அவர் ராஜினாமா செய்ய வேண்டும்.

மேலும், கரூர் மாவட்டத்தில், கோவில் நிலங்கள் மீது நீக்கப்பட்ட பதிவுத் தடையை உடனடியாக மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில், சுயாதீன விசாரணைக் குழு அமைத்து, அனைத்து இனாம் நிலங்களையும் ஆய்வு செய்ய வேண்டும்.

கோவில் சொத்துக்கள் அரசின் சொத்துக்கள் அல்ல; அவை மக்களின் மத நம்பிக்கையுடன் இணைந்துள்ள, பொது அறக்கட்டளைச் சொத்துக்கள். அவற்றைப் பாதுகாப்பது, அரசின் சட்டப்பூர்வ கடமை. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Source link