சின்னத்திரை நடிகர் ஜெயமணி காலமானார்!

சின்னத்திரையில் பல்வேறு தொடர்களில் நடித்து பிரபலமானவர் ஜெயமணி. சிறு வயதிலேயே கலைத் துறையில் ஆர்வம் கொண்ட இவர், மேடை நாடகங்கள் மூலம் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கினார். பின்பு பல்வேறு சீரியல்களில் நடித்து குறிப்பாக ‘திருமதி செல்வம்’ தொடரில் ‘பூங்காவனம்’ என்ற கதாபாத்திரம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். 

திருமதி செல்வம் தொடரைத் தாண்டி மெட்டி ஒலி, கல்யாணப் பரிசு, சிறகடிக்க ஆசை உள்ளிட்ட பல தொடர்களில் நடித்தார். மேலும் இயக்குநராகவும் அனுபவம் கொண்டவர். தொடர்களைத் தாண்டி திரைப்படங்களில் கணிசமாக 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

இவர் தற்போது காலமாகியுள்ளார். மாரடைப்பு காரணமாக அவர் மறைந்திருக்கும் நிலையில் சின்னத்திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் இவரது மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் தற்போது தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Source link