விவசாயிகள் காவல்துறையினரிடையே மோதல்; வன்@றைக்காடாக மாறிய போராட்டக்களம்

மத்தியப் பிரதேச மாநிலம், தலைநகர் போபாலில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  குறைந்தபட்ச ஆதரவு விலை,100% பாசிப்பயிறு கொள்முதல் மற்றும் உரங்கள் தடையின்றி கிடைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,  விவசாயிகள் இந்த போராட்டத்தை நடத்தினர். இதில், காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக வெடித்தது. 

இந்த சம்பவத்தின் காரணமாக, நர்மதாபுரம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில், காவல்துறையினர் அமைத்த பல அடுக்கு பாதுகாப்புத் தடுப்புகளை விவசாயிகள் உடைத்து எறிந்தனர்.  

குறிப்பிட்ட எல்லைகளைத் தாண்டி நகரத்திற்குள் அல்லது முக்கியப் பகுதிகளுக்குள் போராட்டக்காரர்கள் நுழைய முயன்றதால், இந்த மோதல் சம்பவம் அரங்கேறியதாக கூறப்படுகிறது. 

இந்த சம்பவத்தின் போது, கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி, கண்ணீர்ப் புகை குண்டுகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தினர். இந்த மோதலில்   அரசுப் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதோடு, காவலர்கள் மற்றும் விவசாயிகள் பலரும் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.  

Source link