“தற்குறி எனச் சொல்வதே பெரிய வார்த்தைடா”

ஆங்கிலேயருக்கு எதிராக விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட மாமன்னர் பூலித்தேவனின் 311வது பிறந்தநாள் நேற்று (01-09-26) மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த தினத்தையொட்டி அரசியல் தலைவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பூலித்தேவனின் புகழை போற்றும் வகையில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “தவெகவில் உள்ள அறிஞர்களை பார்த்தீர்களா? மதுரை எம்.எல்.ஏ ஒருத்தர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தை அரசு கல்லூரியாக மாற்ற வேண்டும் என்று கேட்கிறார். பல்கலைக்கழகத்துக்கும் கல்லூரிக்கும் வித்தியாசம் தெரியவில்லை. அது ஏற்கெனவே அரசு பல்கலைக்கழகம் தாண்டா. சொல்ல முடியாது அந்த பல்கலைக்கழகத்தை அரசு கல்லூரியாக மாற்றினாலும் மாற்றுவார்கள். உங்களை தற்குறி எனச் சொல்வதே பெருமைக்குரிய வார்த்தை. இதற்கு மேல் வார்த்தை இல்லை.

இந்த இனத்திற்கு எவ்வளவோ பிரச்சனைகள் வந்திருக்கிறது, நாம் பார்த்திருக்கிறோம். முன்னோர் காலத்திலும் சம காலத்திலும் நீண்ட நாட்களாக பல்வேறு பிரச்சனைகளுக்கு போராடியிருக்கிறோம், களத்தில் நின்றிருக்கிறோம். ஆனால் சர்க்கார் பட சுவரொட்டியை கிழித்தது தான் சர்வதேச பிரச்சனையாக இருக்கிறது என்பதை இப்போது தான் பார்க்கிறோம். நீங்க சர்க்கார் பட போஸ்டரை கிழிக்கவில்லை என்றால் நீங்க தான் ஆட்சிக்கு வந்திருப்பீங்க என அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் சொல்கிறார்.

அத்தனை மீனவர்களை சுட்டு போட்டான், நிலத்தின் வளத்தை எல்லாம் கொள்ளை அடிச்சு போறாங்க, காவிரியில் தண்ணீர் வரல, அவ்வளவு போராட்டம் நடக்கிறது. மேட்டூர் அணையை 6 கோடி ரூபாயில் கட்டிருப்பாங்க, ஆனால் அந்த அணையை திறக்க போவதற்கு 6 கோடி செலவழித்து போறது உலகத்தில் நாம தான். 5 ஆண்டுகளில் ஆட்சி நடக்க போவதில்லை, காட்சி தான் நடக்கும். ரூல் நடக்காது ரீல் தான் நடக்கும்” எனக் கூறினார். 

Source link