தூய்மைப் பணியாளர்களை முதல்வர் இப்போது சந்திக்காதது ஏன்? உதயநிதி எழுப்பிய கேள்வி – சட்டென விஜய் கொடுத்த ரியாக்‌ஷன் – cm vijay reaction to udhayanidhi question sanitation workers 100 days protest

சட்டபேரவை கூட்டத்தின் கேள்வி நேரத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,தூய்மைப் பணியாளர்களுக்குப் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் இன்று 15-வது நாளை எட்டியுள்ளது.ஏற்கனவே பேரவையில் இது குறித்து கவனத்திற்குக் கொண்டுவந்த போது, விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதிலளித்திருந்தார்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

ஆனால் இதுவரை சுமூகமான தீர்வு எட்டப்படவில்லை.இத்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சரை நேரடியாகச் சந்தித்து கோரிக்கைகளை முன்வைக்கப் பணியாளர்கள் விரும்புகின்றனர். சென்ற ஆண்டு இதேபோன்ற போராட்டத்தின் போது,கட்சி அலுவலகத்திற்கு வரவழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். எனவே,தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை முதலமைச்சர் எப்போது நிறைவேற்றுவார்? அவர்களைச் சந்தித்துப் பேசுவாரா? என்று கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன் கூறுகையில்,எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டதைப் போல, போராடும் தொழிலாளர்களின் கஷ்டங்களை விரிவாகவே ஏற்கனவே இந்த அவையில் பதிவு செய்திருக்கிறோம்.தூய்மைப் பணியாளர்கள் கூறும் பிரதான கோரிக்கைகளில் நிர்வாகச் சிக்கல்கள் மட்டுமல்லாது நிதி சார்ந்த சிக்கல்களும் உள்ளன. மாநிலத்தின் நிதி நெருக்கடியைச் சமாளித்துத்தான் அரசு அனைத்தையும் வழிநடத்திச் செல்கிறது.

முதல்வராகும் முன்பு சந்தித்தார்.. இப்போது ஏன் சந்திக்க மறுக்கிறார்?

மேலும், இது தொடர்பாகப் பல சங்கங்கள் உள்ளதால், அனைவரையும் ஒன்றாகச் சேர்த்து பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தீர்வு காண கோப்புகள் தயார் நிலையில் உள்ளன. 15 நாட்கள் போராட்டத்தைச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவருக்கு, கடந்த ஆட்சிக் காலத்தில் 100 நாள், 150 நாட்கள் எனத் தொடர் போராட்டங்கள் நடைபெற்றதையும் இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்று கூறினார்.

உடனே இதற்கு பதிலளித்த எங்களுடைய ஆட்சிக் காலத்தில் போராட்டம் நடந்த போது, 100 நாட்களைத் தாண்டி போராட்டம்நடைபெற்றதாகக் கல்வித்துறை அமைச்சர் கூறினார். அப்படியென்றால், நீங்களும் 100 நாட்களைத் தாண்டும் வரை காத்திருக்கப் போகிறீர்களா?என்று கேள்வி எழுப்பிய உதயநிதி ,கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த சேகர்பாபு, மேயர் பிரியா அவர்கள் உள்ளிட்டோர் தூய்மைப் பணியாளர்களைத் தொடர்ந்து சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

ஆனால், இப்போது ஆட்சியில் இருக்கும் போது ஒரு அமைச்சர் கூட போராட்ட களத்திற்குச் சென்று அவர்களைச் சந்திக்கவில்லை. ஆட்சியில் இல்லாத போது தூய்மைப் பணியாளர்களைச் சந்திக்கத் தயாராக இருந்த முதல்வர் விஜய் , இப்போது அவர்களைச் சந்திக்க மறுப்பது ஏன்? என்ற கேள்வியை எழுப்பினார்.

மேலும் இதற்கு பதிலளித்த ராஜ்மோகன்,போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை இரு முறை அறைக்கு அழைத்து வந்து விரிவாகப் பேசியிருக்கிறோம். ஒவ்வொரு கூட்டத்திலும் 3 மணி நேரத்திற்கும் மேலாக அவர்களின் சகோதரனாக நான் தொடர்ந்து பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். கடந்த ஆட்சிக் காலத்தில் அவர்கள் போராடிய போது ரிப்பன் மாளிகை உள்ளேயே அவர்களை அனுமதிக்கவில்லை; நடைபாதையில்தான் அமர்ந்து போராடினார்கள்.

ஆனால் இப்போது ரிப்பன் மாளிகை வளாகத்திற்குள்ளேயே ஜனநாயக முறையில் போராட நாங்கள் அனுமதி அளித்திருக்கிறோம்.இதற்குச் சுமூக தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. கோரிக்கைகள் தொடர்பான கோப்புகள் (Files) அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. வெகு விரைவில் நல்ல தீர்வு எட்டப்படும் என்று கூறினார்.

Source link