‘6 மாதம் ஆச்சு; நோ பீரியட்ஸ், நோ ப்ரக்னன்சி, நோ மெனோபாஸ்… இந்த அனுபவம் கற்றுத் தந்த பாடம்’: நடிகை ஃபரினா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணமா சீரியலில் வில்லியாக நடித்து பரவலாக கவனம் ஈர்த்தவர் நடிகை ஃபரினா ஆஸாத். பாரதி கண்ணமா 2 -ஆம் பாகத்திலும் இவர் நடித்தார். ஆனால், இந்த தொடர் மக்களிடம் பெரியளவில் வரவேற்பைப் பெறவில்லை. தொடர்ந்து மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இறுதிச் சுற்று வரை சென்றார். அதுமட்டும் இல்லாமல் பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் சிறப்பு அழைப்பாளராகவும், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றி தனக்கான ரசிகர் வட்டாரத்தை மெயிண்டெயின் செய்து வருகிறார். 

இப்படி ஆஃபரா தந்தா என்னதான் பண்ணுறது? ஐ.ஆர்.சி.டி.சி-யின் வேற லெவல் ஜப்பான் ட்ரிப்; வாங்க கிளம்பலாம்

இந்நிலையில், நடிகை ஃபரினா தனது மாதவிடாய் குறித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “எனக்கு மாதவிடாய் நின்று ஏறக்குறைய 6 மாதங்கள் ஆகிவிட்டது. மாதவிடாயும் இல்லை, கர்ப்பமும் இல்லை, மாதவிடாய் முற்றிலும் நிற்கும் (Menopause) வயதும் இல்லை. நான் மருந்துகள் சாப்பிட்டுவிட்டேன், பொறுமையுடன் காத்திருந்துவிட்டேன், கவலைப்பட்டேன், அளவுக்கு அதிகமாக யோசித்தும் பார்த்துவிட்டேன்… ஆனால் இன்னும் எதுவும் நடக்கவில்லை.

இது பார்ப்பதற்கு எளிதாகத் தோன்றலாம், ஆனால் உண்மையிலேயே, இந்த மாதங்கள் முழுவதிலும் என் ஹார்மோன்கள் எப்படி மாறுபட்டுக்கொண்டிருந்தன என்றோ, அல்லது அதனால் நான் எந்தளவிற்குப் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்றோ எனக்கே தெரியவில்லை. மனநிலை மாற்றங்கள், உணர்ச்சிப் போராட்டங்கள், அளவுக்கு அதிகமான யோசனைகள், எந்தக் காரணமும் இன்றி மனச்சோர்வாக உணர்வது… ஒருவேளை நான் உணர்ந்ததை விட என் உடல் அதிக சிரமங்களைச் கடந்து கொண்டிருக்கிறது போல.

ஆனால் இந்த அனுபவம் எனக்கு ஒன்றைக் கற்றுக்கொடுக்கிறது. நம் உடல்கள் அமைதியாக எவ்வளவோ விஷயங்களைச் எதிர்கொள்கின்றன. மேலும் குணமடைவது என்பது எப்போதும் விரைவாகவோ அல்லது எளிதாகவோ நடப்பதில்லை. உடலளவிலோ அல்லது மனதளவிலோ இப்போது நீங்கள் எதைக் கடந்து கொண்டிருந்தாலும், தயவுசெய்து ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், அதற்கு நேரமெடுக்கலாம், அது உங்கள் பொறுமையைச் சோதிக்கலாம், ஆனால் உங்களால் அதிலிருந்து மீண்டு வர முடியும். 

நாம் நினைப்பதை விட நம் உடல்கள் வலிமையானவை, நாமும் தான்.
என் உடல் விரைவில் அதற்கான இயல்பு நிலையை மீண்டும் கண்டடையும் என்று நம்புகிறேன். அதுவரை, நான் பொறுமையையும், நம்பிக்கையையும், என் மீது இன்னும் கொஞ்சம் அதிகமான அன்பையும் தேர்ந்தெடுக்கிறேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

Source link