வாஷிங்டன்: அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், நடந்த துப்பாக்கிச்சூட்டில் சந்தேக நபர் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், டவுன்டவுன் மினியாபோலிஸில் உள்ள லோரிங் பார்க் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் புகுந்த மர்மநபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். குடியிருப்பு பகுதியில் வெளியில் நின்று கொண்டிருந்த மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் சந்தேக நபர் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீஸ் அதிகாரிகள் உட்பட 6 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்திற்கு எப்பிஐ மற்றும் உள்ளூர் அதிரடிப்படை விரைந்து வந்து சூழ்நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் உள்ள புனித தாமஸ் பல்கலைக்கழகத்தின் வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டது. மினசோட்டா மாகாண கவர்னர் டிம் வால்ஸ், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது இரங்கலையும், மீட்புப் பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.
