TN Assembly Live Updates: சட்டசபை மானியக் கோரிக்கை

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 4-ந் தேதி தொடங்கியது. முதல்நாளில் பொது பட்ஜெட், அடுத்த நாளில் வேளாண் பட்ஜெட் என தொடர்ச்சியாக தாக்கல் செய்யப்பட்டு அடுத்த நாட்களில் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து துறைவாரியாக மானியக் கோரிக்கை தொடர்பான விவாதங்கள், நடைபெற்று வரும் நிலையில், இதில் புதிய அறிவிப்புகளும் வெளியிபிடப்பட்டு வருகிறது. 

அதே சமயம், மானியக் கோரிக்கை தொடர்பான விவாதத்தில், ஆளும்கட்சி – எதிர்க்கட்சி இடையே நடக்கும் விவாதங்கள் பரபரபப்பின் உச்சமாக இருக்கிறது. இதனிடையே நேற்று (செப்டம்பர் 2) பால்வளம், மீன் வளம் மற்றும் மீனவர் நலன், கால்நடை பராமரிப்பு ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது.

அவசர சிகிச்சை பிரிவு

ரூ.6 கோடி மதிப்பீட்டில் பொன்னேரி அரசு மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவு மற்றும் உள்நோயாளி – வெளி நோயாளி பிரிவு மேம்படுத்தப்படும். ரூ.48.84 லட்சம் செலவில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கான உபகரணங்கள் வழங்கப்படும். ரூ.23.3 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையத்திற்கான உபகரணங்கள் வழங்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். 

லேடி வெலிங்டன் ஆசனத்தில் அமர்ந்த தவெக எம்.எல்.ஏ சத்யபாமா – தங்கம் தென்னரசு வாழ்த்து!

லேடி வெலிங்டன் அவர்கள் இந்த சட்டமன்றத்திற்கு வழங்கிய ஆசனம், ஒரு பெண் அமர்அ வேண்டும் என்பது எல்லோருடைய எதிர்பார்ப்பு. மாற்றுத் தலைவராக நீங்கள் அமர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என பேரவை மாற்றுத் தலைவராக செயல்பட்ட தவெக எம்.எல். ஏ சத்யபாமாவுக்கு தங்கம் தென்னரசு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

  • Sep 03, 2026 07:40 IST

    ஐகோர்ட்டில் முதன்மை மொழி தமிழ் – முதல்வர் தனித் தீர்மானம்

    சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மை மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று கோரி முதல்வர் விஜய் இன்று சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டுவர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Sep 03, 2026 07:38 IST

    காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை

    சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்  வசமுள்ள காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதங்கள் இன்று தொடங்குகின்றன.  சட்ட ஒழுங்கு, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட விவகாரங்களில் 7ஆம் தேதி முதலமைச்சர் பதிலுரை வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Source link