ஈரானுடன் ஒப்பந்தம் செய்தால் பொருளாதாரத் தடை விதிக்க நேரிடும்; இந்தியாவை மிரட்டிப் பார்க்கும் அமெரிக்கா

நியூயார்க்: இந்தியா – ஈரான் இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று நம்புவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் அமெரிக்கா, அந்நாட்டுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக, பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்த சூழலில், கிர்கிஸ்தானில் நடந்த 26வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடியும், ஈரான் அதிபர் பெஷெஷ்கியானும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சூழலில், அவர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மார்கோ ரூபியோ கூறியதாவது; இந்தியா மற்றும் ஈரான் இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக எந்த வித பேச்சுவார்த்தையும் நடப்பதாக நான் நம்பவில்லை. ஒவ்வோரு நாட்டிற்கும் ஒரு வெளியுறவு கொள்கை இருக்கும். பல நாடுகள் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஈரானுக்கு எதிராக விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையை வேறு எந்த நாடுகளும் மீறக் கூடாது. அப்படி, மீறி ஒப்பந்தம் செய்யும் நாடுகள் மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும். இந்த விவகாரத்தில் அதிபர் டிரம்ப் மிகவும் தெளிவாக இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Source link