சிதம்பரத்தில் கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பதை கண்டித்து மேலவீதி பெரியார் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பி.பி.கே.சித்தார்த்தன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டத் தலைவர் என்.வி. செந்தில்நாதன், கி நகரத் தலைவர் தில்லை ஆர்.மக்கீன், மாவட்ட துணைத் தலைவர் ராஜாசம்பத்குமார், செயல் தலைவர் தில்லை கோ.குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வெங்கடேசன், சாம்பமூர்த்தி, குமராட்சி ரங்கநாதன் உள்ளிட்டோர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
