ஏஐ பயன்படுத்தத் தடை; அரசு அதிரடி அறிவிப்பு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் செயற்கை நுண்ணறிவை (ஏஐ) பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  

ஏஐ பயன்படுத்துவதால், குழந்தைகளின் தனித்திறமை, சுயமாகச் சிந்திக்கும் திறன் மற்றும் மனநலன் ஆகியவற்றைப் பாதிக்கும் சூழல் நிலவுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நியூயார்க்கின் மேயர் மம்தானி தெரிவித்துள்ளார்.  

8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஏஐ யை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், 9 வகுப்பிற்கு மேல் பயிலும் மாணவர்கள் தங்களின் தேவைக்கேற்ப ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 6 லட்சம் மாணவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தடை ஓராண்டிற்கு நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இருப்பினும், ஆசிரியர்கள் பாடங்களைத் திட்டமிடுதல், வகுப்பு அட்டவணையைத் தயாரித்தல் போன்ற பணிகளுக்குச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Source link