கமல்ஹாசன் தற்போது அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாத நிலையில் தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதில் வீர தீர சூரன் பட இயக்குநர் எஸ்.யு.அருண் குமாரை புக் செய்துள்ளார். இப்படத்தை கமலின் ராஜ் கமல் மற்றும் டர்மெரிக் மீடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
இந்த அறிவிப்பை கமல்ஹாசனின் லுக் டெஸ்ட் புகைப்படம் மூலம் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் ‘தோ வாரேன்’ என்ற கேப்ஷனையும் குறிப்பிட்டுள்ளது. இந்த லுக் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களிடையே மிகுந்த ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ளது. கமல்ஹாசனும், எஸ்.யு.அருண் குமாரும் இணையும் முதல் படம் இது என்பதால், இக்கூட்டணி மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டு, தனித்துவமான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதில் பெயர் பெற்ற கமல்ஹாசனின் இந்த புதிய தோற்றம், படத்தின் கதைக்களம் குறித்த ரகசியத்தைக் காக்கும் அதே வேளையில், படத்திற்காக உருவாக்கப்படும் உலகத்தைப் பற்றிய ஒரு சிறு பார்வையை ரசிகர்களுக்கு அளித்து பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. ‘லுக் டெஸ்ட்’ வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படம் குறித்த கூடுதல் விவரங்கள் பின்னர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
தோ வாரேன் 🔥@ikamalhaasan#SUArunkumar#KamalHaasan#Mahendran@RKFI@turmericmediaTM@magizhmandrampic.twitter.com/1GMUOdcSH6
— Raaj Kamal Films International (@RKFI) September 3, 2026
