குடிநீர் இணைப்பு வழங்கக் கோரி அமைச்சரிடம் மனு!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட காரிய பெருமாள் கோவில் தெருவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் பொதுமக்களுக்கு உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள்  சிதம்பரத்திற்கு வருகை தந்த வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரைச் சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில், காரிய பெருமாள் கோவில் தெருவில் ஏராளமான குடும்பங்கள் நீண்ட காலமாக வசித்து வரும் நிலையில், இதுவரை வீடுகளுக்கு முறையான குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை.  மேலும், தெருவில் குடிநீர் விநியோகத்திற்கான குழாய்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள போதிலும், அவற்றில் இருந்து வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் தினசரி குடிநீருக்காக மிகுந்த சிரமத்தையும், சந்தித்து வருகின்றோம். இதுகுறித்து சிதம்பரம் நகராட்சி ஆணையரிடம் பலமுறை மனுக்கள் அளித்தும், நேரில் முறையிட்டும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி, ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களைப் பயன்படுத்தி தகுதியான அனைத்து வீடுகளுக்கும் உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார். இந்நிகழ்வில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி சரவணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Source link