ரூ.4,500 லஞ்சம் வாங்கிய பிடிஓ சஸ்பெண்ட்: கலெக்டர் உத்தரவு

பெரம்பலுார்: பெரம்பலுார் அருகே, கான்ட்ராக்டரிடம் 4,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன்,48, என்பவரை பெரம்பலுார் கலெக்டர் ஷரண்யா அரி உத்தரவிட்டார்.

பெரம்பலுார் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலராக சித்தார்தன்,48, என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் பணி முடித்த ஒப்பந்ததாரர் ஒருவர் பில் தொகைக்காக வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்தனை அணுகியபோது, 6,500 ரூபாய் லஞ்சம் கேட்டார். அந்த ஒப்பந்ததாரர் 4,500 ரூபாய் கொடுத்துள்ளார். அதற்கு சித்தார்த்தன் மீதமுள்ள 2,000 ரூபாய் கொடுக்குமாறு, அவர் கையால் பேப்பரில் எழுதி காண்பித்தார்.

இதை ஒப்பந்ததாரர் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக பதிவிட, அது வைரலாக பரவியது. இதைத்தொடர்ந்து, வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்தனை சஸ்பெண்ட் செய்து பெரம்பலுார் கலெக்டர் ஷரண்யா அரி உத்தரவிட்டார்.

Source link