‘திட்டங்களைக் கொண்டு வந்து, அதையும் நிறைவேற்றாமல் விட்டு விட்டோம்’ என்பதைச் சொல்லாமல் சொல்கிறார் மேயர் பிரியா! அதை விடுங்கள்… ‘ஸ்டிக்கர்’ திட்டங்களை நிறைவேற்றிய புகழ், தி.மு.க.,வை தான் சேரும்… இல்லையா மோகன்!
ஆதங்கத்தில் ஏதேதோ பேசுகிறார்… சூரியனும் மாலை நேரங்களில் மறைந்து விடுகிறதே. அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ஸ்டாலின்?
உதயநிதி கேட்டிருப்பது சரியே. கேள்வி நேரங்களில், துறை சார்ந்த செயலர்களும், அதிகாரிகளும், சட்டசபையில், ‘ஆபீசர்ஸ் கேலரி’ என்று அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் இருக்க வேண்டும் என்பது சட்டசபை மரபு. அப்போது தான், என்ன பிரச்னை குறித்து எம்.எல்.ஏ.,க்கள் கேள்வி கேட்கின்றனர் என்பது புரியும்; பதில் சொல்லவும் முடியும். சபாநாயகர் பிரபாகரும் அந்த உத்தரவை பிறப்பித்துள்ளாரே!
நல்லது தானே. மக்கள் பிரச்னைகளைப் பற்றி பேசுவதற்காக தானே சட்டசபை இருக்கிறது. தனி நபரைப் புகழ்ந்து பாடும் இடம் அல்ல அது. சட்டசபையில், பா.ம.க., – எம்.எல்.ஏ., சவுமியா போல் பேச, அனைவரும் பயிற்சி பெற வேண்டும். அதை விடுத்து, மாமன், மச்சான் கதை பேசி நேரத்தை வீணடிக்கக் கூடாது.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், துப்பாக்கி சுடுவதில் வல்லவர். காவல்துறை இளைஞர்கள், தேசிய அளவில் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்கும் வகையில், அவர்களுக்கு பயிற்சியும் அளித்து வருகிறார். அது தான் காவலர்களுக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது. நம் டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வாலும், துப்பாக்கி சுடும் போட்டிகளில், பல வெற்றிகளைக் குவித்தவர்.
