Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 4 செப்டம்பர் 2026: கிருஷ்ண ஜெயந்தி

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஆவணி-18 (வெள்ளிக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : அஷ்டமி இரவு 11.46 மணி வரை பிறகு நவமி

நட்சத்திரம் : ரோகிணி இரவு 11.22 மணி வரை பிறகு மிருகசீர்ஷம்

யோகம் : மரண / சித்தயோகம்

ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை

கிருஷ்ண ஜெயந்தி. வைகாஸன ஜெயந்தி. பெரியவாச்சான் பிள்ளை திருநட்சத்திர வைபவம். வேலூர் கோட்டை ஸ்ரீதுர்கையம்மன், பட்டீஸ்வரம் ஸ்ரீதுர்கையம்மன், கதிராமங்கலம் ஸ்ரீதுர்கையம்மன் தலங்களில் பால் அபிஷேகம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. மதுரை ஸ்ரீ நவநீதகிருஷ்ணசுவாமி உற்சவாரம்பம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி புறப்பாடு, சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன்கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை, திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோயிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சனம், மாடவீதி புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சனம். தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியான் வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை தலங்களில் அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம் – பணிவு

ரிஷபம் – ஆக்கம்

மிதுனம் – அனுகூலம்

கடகம் – முயற்சி

சிம்மம் – யோகம்

கன்னி – கடமை

துலாம் – உயர்வு

விருச்சிகம் – கண்ணியம்

தனுசு – நற்செயல்

மகரம் – மேன்மை

கும்பம் – கட்டுப்பாடு

மீனம் – போட்டி

Source link