ஜந்தர் மந்தர் போராட்டத்தில் கொலைக் குற்றவாளிகள்; அடையாளம் கண்ட டெல்லி போலீஸ்: 25 முக்கிய நபர்கள் விபரம்

மாணவர்களின் தேர்வுத்தாள் கசிவு தொடர்பான போராட்டங்கள் குறித்து பதிவு செய்யப்பட்ட அனைத்து முதல் தகவல் அறிக்கைகளையும் (FIR) உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. அதேவேளையில், ஜூலை 20 முதல் 26ஆம் தேதி வரை ஜந்தர் மந்தரில் நடைபெற்ற முக்கிய போராட்டத் தளத்தில், குற்றப் பின்னணி கொண்டவர்கள் என டெல்லி காவல்துறையால் கூறப்பட்டு, அதன் முக அடையாளம் காணும் மென்பொருள் மூலம் அடையாளம் காணப்பட்ட 2,873 பேருக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: 

எனினும், முக அடையாளத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படாது என்றும், “நேரடி கள விசாரணை” (field verification) மேற்கொண்ட பின்னரே எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. இந்நிலையில், காவல்துறையின் முன் உள்ள பணியும் தெளிவாகியுள்ளது.

கொலை, கொலை முயற்சி, பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் போன்ற தீவிர குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டவர்களை ஆய்வு செய்ததில், ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றபோது முக அடையாள அமைப்பு (FRS) மூலம் அடையாளம் காணப்பட்ட பட்டியலில் குறைந்தது 25 பேர் ஏற்கெனவே சிறையில் இருந்தது காவல்துறை, சிறைத்துறை மற்றும் நீதிமன்றப் பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

காவல்துறையின் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட 2,873 பேரில், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கொலை, கொலை முயற்சி மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டவர்கள்மீது கவனம் செலுத்தியது. இதில் மொத்தம் 205 பேர் இடம்பெற்றிருந்தனர். அவர்களில் 101 பேர் கொலை வழக்குகளையும், 61 பேர் பாலியல் வன்கொடுமை வழக்குகளையும், ஆறு பேர் குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டமான போக்சோ சட்டத்தின் கீழான வழக்குகளையும் எதிர்கொண்டவர்கள். மேலும், கொலை முயற்சி வழக்கில் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட 62 பேரில் 37 பேரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர்.

இந்த 205 பேர் கொண்ட குழுவில், கொலைக் குற்றச்சாட்டை எதிர்கொண்ட 17 பேர், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை எதிர்கொண்ட 4 பேர் (அவர்களில் இருவர் போக்சோ வழக்குகளை எதிர்கொண்டவர்கள்), மேலும் கொலை முயற்சி குற்றச்சாட்டை எதிர்கொண்ட 4 பேர் என மொத்தம் 25 பேர், ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின்போது முக அடையாள அமைப்பு (FRS) மூலம் அடையாளம் காணப்பட்ட நேரத்தில், டெல்லியின் திகார், மண்டோலி மற்றும் ரோஹிணி ஆகிய மூன்று சிறை வளாகங்களில் அடைக்கப்பட்டிருந்தனர் என்று பதிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த 25 பேரில், ஜூலை 24ஆம் தேதி மூவர், ஜூலை 25ஆம் தேதி 21 பேர், போராட்டத்தின் கடைசி நாளான ஜூலை 26ஆம் தேதி ஒருவர் என முக அடையாள அமைப்பு மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Facial-Recognition-System-FRS-in-a-Delhi-Police-van-parked-near-the-Jantar-Mantar-protest-site-in-July-end.-abhinav-saha

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் திங்கள்கிழமை அனுப்பிய கேள்வித்தாளுக்கு பதிலளித்த டெல்லி காவல்துறை கூறுகையில், போராட்டத்தின்போது, முதற்கட்டமாக குற்றப் பின்னணி கொண்டவர்கள் எனக் கருதப்பட்ட 2,873 பேர் அடையாளம் காணப்பட்டனர். இருப்பினும், இது தொடர்பான மேலதிக விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளது. ஆகஸ்ட் 17ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட காவல்துறையின் பிரமாணப் பத்திரத்தின்படி, ஜந்தர் மந்தர் போராட்டத் தளத்தில் குற்றப் பதிவுகளைக் கொண்ட நபர்களை அதன் முக அடையாள அமைப்பு (FRS) அடையாளம் கண்டது. அவர்களின் “விவரங்கள், அதிகாரப்பூர்வ காவல்துறை தரவுத்தளங்களில் ஏற்கெனவே உள்ள பதிவுகளுடன் பொருந்தியதாக” அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், டெல்லி காவல்துறையின் பயோமெட்ரிக் தரவுத்தளமான ‘கிரைம் குண்ட்லி’ (Crime Kundli) மூலம் 2,402 பேர் அடையாளம் காணப்பட்டதாகவும், குற்றப் பதிவுகளின் அடிப்படையில் மேலும் 471 பேர் அடையாளம் காணப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

b-serious-charges-updated

கொலை

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் சரிபார்த்த 205 பேரில், போராட்டத்தின்போது கொலைக் குற்றச்சாட்டின் பேரில் சிறையில் இருப்பதாகக் காட்டப்பட்ட 17 பேர் விவரம் வருமாறு:

கிஷன் (26) – ஜூலை 24 அன்று மாலை 6.36 மணியளவில் எப்.ஆர்.எஸ் (FRS) மூலம் அடையாளம் காணப்பட்டார். வடகிழக்கு டெல்லியின் கரவால் நகர் பகுதியில் கைது செய்யப்பட்ட இவர் மீது ஆயுதம் ஏந்தி கொள்ளையடித்த வழக்குகளும் உள்ளன. முதன்முறையாக 2022 ஜூலை 9-ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 2023 அக்டோபர் 17-ஆம் தேதி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 

முஸ்தாக் (29) – ஜூலை 24 அன்று மாலை 6.31 மணியளவில் அடையாளம் காணப்பட்டார். வடகிழக்கு டெல்லியின் கோகுல்புரி பகுதியில் கைது செய்யப்பட்ட இவர் மீது வழிப்பறி மற்றும் கொலை முயற்சி வழக்குகளும் உள்ளன. முதன்முறையாக 2024 ஜனவரி 1-ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 2026 ஜூன் 23-ஆம் தேதி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 

அங்கித் குமார் (22) – ஜூலை 24 அன்று மாலை 5.58 மணியளவில் அடையாளம் காணப்பட்டார். வட டெல்லியின் வாஜிராபாத் பகுதியில் கைது செய்யப்பட்டார். முதன்முறையாக 2022 நவம்பர் 11-ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த ஆண்டு ஜூன் 24-ஆம் தேதி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 

யோகேஷ் (27) – ஜூலை 25 அன்று மாலை 4.24 மணியளவில் அடையாளம் காணப்பட்டார். தெற்கு டெல்லியில் கைது செய்யப்பட்டார். முதன்முறையாக 2024 நவம்பர் 17-ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அதே ஆண்டு நவம்பர் 29-ஆம் தேதி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 

பிரதாப் சிங் சிசோடியா (31) – ஜூலை 25 அன்று மாலை 3.35 மணியளவில் அடையாளம் காணப்பட்டார். கிழக்கு டெல்லியின் காந்தி நகர் பகுதியில் மற்றொருவருடன் சேர்ந்து கைது செய்யப்பட்டார். முதன்முறையாக 2014 நவம்பர் 28-ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் பலமுறை சிறையில் அடைக்கப்பட்ட இவர், 2026 ஆகஸ்ட் 5-ஆம் தேதி மாண்டோலி சிறையில் இருந்து திகார் சிறைக்கு மாற்றப்பட்டார். 

அர்ஜுன் (28) – ஜூலை 25 அன்று பிற்பகல் 1.48 மணியளவில் அடையாளம் காணப்பட்டார். மேற்கு டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் கைது செய்யப்பட்டார். முதன்முறையாக 2021 மார்ச் 10-ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 2023 மார்ச் 9-ஆம் தேதி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 

சோனு குமார் (34) – ஜூலை 25 அன்று இரவு 8.39 மணியளவில் அடையாளம் காணப்பட்டார். தென்கிழக்கு டெல்லியின் ஓக்லா தொழிற்பேட்டை பகுதியில் கைது செய்யப்பட்டார். முதன்முறையாக 2020 ஜனவரி 30-ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 2025 அக்டோபர் 27-ஆம் தேதி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 

விஜய் (26) – ஜூலை 25 அன்று இரவு 11.40 மணியளவில் அடையாளம் காணப்பட்டார். வடமேற்கு டெல்லியின் ஷாலிமார் பாக் பகுதியில் கைது செய்யப்பட்டார். முதன்முறையாக 2024 ஆகஸ்ட் 29-ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 2026 ஜனவரி 19-ஆம் தேதி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 

ராகேஷ் (42) – ஜூலை 25 அன்று பிற்பகல் 1.30 மணியளவில் அடையாளம் காணப்பட்டார். வடமேற்கு டெல்லியில் கைது செய்யப்பட்டார். இவர் மீது கொள்ளை, வழிப்பறி, திருட்டு மற்றும் கலால் சட்டத்தின் கீழான வழக்குகளும் உள்ளன. முதன்முறையாக 2008 டிசம்பர் 7-ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 2024 பிப்ரவரி 18-ஆம் தேதி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 

போலா என்கிற ஷ்யாம் குமார் (32) – ஜூலை 25 அன்று மாலை 4.58 மணியளவில் அடையாளம் காணப்பட்டார். வடமேற்கு டெல்லியில் கைது செய்யப்பட்டார். இவர் மீது வழிப்பறி மற்றும் வீட்டை உடைத்து திருடிய வழக்குகளும் உள்ளன. முதன்முறையாக 2015 ஏப்ரல் 26-ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 2025 மார்ச் 29-ஆம் தேதி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 

ராஜா (27) – ஜூலை 25 அன்று பிற்பகல் 2.22 மணியளவில் அடையாளம் காணப்பட்டார். வட டெல்லியின் சப்ஜி மண்டி பகுதியில் கைது செய்யப்பட்டார். முதன்முறையாக 2020 செப்டம்பர் 1-ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 2024 ஜூலை 1-ஆம் தேதி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 

விக்கி என்கிற மனோஜ் தாக்கூர் (34) – ஜூலை 25 அன்று இரவு 11.12 மணியளவில் அடையாளம் காணப்பட்டார். வட டெல்லியின் கோத்வாலி பகுதியில் கைது செய்யப்பட்டார். முதன்முறையாக 2015 ஜனவரி 2-ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 2016 மே 7-ஆம் தேதி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 

முகமது ஃபராஸ் (23) – ஜூலை 25 அன்று பிற்பகல் 2.59 மணியளவில் அடையாளம் காணப்பட்டார். வட டெல்லியின் வாஜிராபாத் பகுதியில் கைது செய்யப்பட்டார். இவர் மீது தனியாக கொள்ளை வழக்கும் உள்ளது. முதன்முறையாக 2022 ஜனவரி 20-ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 2024 அக்டோபர் 9-ஆம் தேதி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 

மனிஷ் (28) – ஜூலை 25 அன்று மாலை 4.25 மணியளவில் அடையாளம் காணப்பட்டார். மத்திய டெல்லியின் ரஞ்சித் நகர் பகுதியில் கைது செய்யப்பட்டார். முதன்முறையாக 2023 ஏப்ரல் 24-ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 2024 அக்டோபர் 23-ஆம் தேதி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 

தர்மேந்தர் யாதவ் (37) – ஜூலை 25 அன்று பிற்பகல் 1.20 மணியளவில் அடையாளம் காணப்பட்டார். டெல்லியின் துவாரகா பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர் மீது திருட்டு மற்றும் கொலை முயற்சி வழக்குகளும் உள்ளன. முதன்முறையாக 2016 ஜூலை 22-ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 2026 மே 14-ஆம் தேதி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 

சோனு (29) – ஜூலை 25 அன்று மாலை 3.44 மணியளவில் அடையாளம் காணப்பட்டார். ஷாஹ்தரா மாவட்டத்தில் உள்ள ஜி.டி.பி. என்க்ளேவ் பகுதியில் கைது செய்யப்பட்டார். இவர் மீது கொள்ளை வழக்குகளும் உள்ளன. முதன்முறையாக 2018 பிப்ரவரி 11-ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 2022 ஏப்ரல் 26-ஆம் தேதி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 

ராயல் மாஸி (25) – ஜூலை 26 அன்று மாலை 5.45 மணியளவில் அடையாளம் காணப்பட்டார். தெற்கு டெல்லியின் டிக்ரி பகுதியில் கைது செய்யப்பட்டார். முதன்முறையாக 2021 ஆகஸ்ட் 20-ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 2023 ஏப்ரல் 4-ஆம் தேதி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

frs-custody-contradiction

இவற்றில் குறைந்தது ஒரு வழக்கு, தலைநகரில் நடைபெற்ற பரபரப்பான கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக உள்ளது. தெற்கு டெல்லியின் உயர்தரப் பகுதியான கிரேட்டர் கைலாஷ்-1 பகுதியில் உடற்பயிற்சி கூட உரிமையாளர் நாதிர் ஷா கொலை செய்யப்பட்ட வழக்கில், யோகேஷ் என்றழைக்கப்படும் ராஜு கைது செய்யப்பட்டார். இந்தக் கொலையில் அவருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. கிடைத்துள்ள பதிவுகளின்படி, பிரபல கேங்ஸ்டர்களான லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் ஹாஷிம் பாபா ஆகியோரின் குற்றக் குழுக்களுக்காக துப்பாக்கிச் சுடும் நபராக யோகேஷ் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையின்போது அவரது இடது காலில் குண்டு பாய்ந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

பாலியல் பலாத்காரம்

போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மூன்று பேர் உட்பட, பாலியல் பலாத்கார வழக்குகளுடன் தொடர்புடைய நான்கு குற்றவாளிகள்:

அங்கித் என்ற மோக்லி (34): ஜூலை 25-ஆம் தேதி பிற்பகல் சுமார் 3.28 மணியளவில் அடையாளம் காணப்பட்டார். மேற்கு டெல்லியின் திலக் நகர் பகுதியில் 2022-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். முதன்முறையாக 2022 பிப்ரவரி 15-ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 2024 ஜூலை 16-ஆம் தேதி மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

சுனில் குமார் (26): ஜூலை 25-ஆம் தேதி மாலை சுமார் 4.04 மணியளவில் அடையாளம் காணப்பட்டார். போக்சோ சட்டத்தின் கீழ் தெற்கு டெல்லியில் கைது செய்யப்பட்டார். முதன்முறையாக 2021 அக்டோபர் 15-ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 2025 ஆகஸ்ட் 30-ஆம் தேதி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஹீரா சிங்: ஜூலை 25-ஆம் தேதி பிற்பகல் சுமார் 3.31 மணியளவில் அடையாளம் காணப்பட்டார். போக்சோ சட்டத்தின் கீழ் வடகிழக்கு டெல்லியில் கைது செய்யப்பட்டார். 2023 ஜூலை 11-ஆம் தேதி முதல் சிறையில் உள்ளார்.

குந்தன்: ஜூலை 25-ஆம் தேதி இரவு சுமார் 11.48 மணியளவில் அடையாளம் காணப்பட்டார். போக்சோ சட்டத்தின் கீழ் வடகிழக்கு டெல்லியில் கைது செய்யப்பட்டார். முதன்முறையாக 2024 மார்ச் 30-ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 2024 மே 29-ஆம் தேதி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

c-why-not-proof

கொலை முயற்சி

கொலை முயற்சி வழக்குகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நான்கு பேர்:

மகேஷ் (33): ஜூலை 25-ஆம் தேதி பிற்பகல் சுமார் 3.34 மணியளவில் அடையாளம் காணப்பட்டார். வடக்கு டெல்லியின் கோட்வாலி பகுதியில் கைது செய்யப்பட்டார். முதன்முறையாக 2022 மே 23-ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 2024 ஏப்ரல் 29-ஆம் தேதி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

பாபி (24): ஜூலை 25-ஆம் தேதி மாலை சுமார் 4.23 மணியளவில் அடையாளம் காணப்பட்டார். தெற்கு டெல்லியின் சங்கம் விஹார் பகுதியில் கைது செய்யப்பட்டார். இவர் மீது கொள்ளை வழக்கும் உள்ளது. முதன்முறையாக 2021 மே 3-ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 2024 பிப்ரவரி 21-ஆம் தேதி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜிஷான் அகமது இத்ரிஷி (25): ஜூலை 25-ஆம் தேதி மாலை சுமார் 4.55 மணியளவில் அடையாளம் காணப்பட்டார். தென்மேற்கு டெல்லியின் சாகர்பூர் பகுதியில் கைது செய்யப்பட்டார். இவர் மீது வழிப்பறி வழக்கும் உள்ளது. முதன்முறையாக 2020 பிப்ரவரி 17-ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 2026 மார்ச் 19-ஆம் தேதி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

அன்னு கிலோடியா என்ற பஹல்வால் (27): ஜூலை 25-ஆம் தேதி பிற்பகல் சுமார் 3.13 மணியளவில் அடையாளம் காணப்பட்டார். தென்மேற்கு டெல்லியின் கிஷன் கார்க் பகுதியில் கைது செய்யப்பட்டார். முதன்முறையாக 2021 அக்டோபர் 23-ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 2022 மார்ச் 25-ஆம் தேதி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
எப்.ஆர்.எஸ் (‘FRS) அடிப்படையில் மட்டும் நடவடிக்கை எடுக்கப்படாது.

டெல்லி காவல்துறையின் முக அடையாளம் காணும் மென்பொருள் (Facial Recognition Software – FRS), கண்டறியப்படும் முகங்களைச் சுற்றி பெட்டிகளை உருவாக்கி, அவற்றை காவல்துறையின் தரவுத்தளத்தில் உள்ள படங்களுடன் ஒப்பிடுகிறது. 2022-ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு அளித்த பதிலில், தங்களது அமைப்பு 80 சதவீத துல்லியத்தைக் காட்டினால், அந்த முகப் பொருத்தத்தை “நேர்மறையான பொருத்தம்” (Positive Match) எனக் கருதுவதாக டெல்லி காவல்துறை தெரிவித்திருந்தது.

a-key-takeaways-updated

எனினும், இந்த முடிவு மட்டுமே ஒருவரின் அடையாளத்தை உறுதி செய்வதற்கான ஆதாரமாகக் கருதப்படாது. பயன்படுத்தப்படும் அல்காரிதம், கேமராவின் கோணம், வெளிச்சம், படத்தின் தரம், முகக்கவசம் மற்றும் தேடப்படும் தரவுத்தளத்தின் தன்மை உள்ளிட்ட பல காரணிகளுக்கு ஏற்ப இதன் செயல்திறன் மாறுபடும். ஜந்தர் மந்தரில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின்போது, அதிகப்படியான பலத்தைப் பயன்படுத்தியதாகவும், கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் குற்றம்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே டெல்லி காவல்துறை உச்ச நீதிமன்றத்தில் இந்த பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது. மாவட்ட வாரியாகப் பார்க்கும்போது, டெல்லியின் வடக்கு மாவட்டத்தில் அதிகபட்சமாக 285 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்ததாக வெளிப்புற டெல்லியில் 257 பேர், வடமேற்கு டெல்லியில் 256 பேர், வடகிழக்கு டெல்லியில் 174 பேர், கிழக்கு டெல்லியில் 173 பேர், தென்மேற்கு டெல்லியில் 166 பேர் எனப் பதிவாகியுள்ளது. மேலும், ரயில்வே, ஷஹ்தாரா, மத்திய டெல்லி, தென்கிழக்கு டெல்லி, மேற்கு டெல்லி, துவாரகா, தெற்கு டெல்லி, ரோஹிணி, புதுடெல்லி, குற்றப்பிரிவு, ஐஜிஐ விமான நிலையம், மெட்ரோ மற்றும் சிறப்புப் பிரிவு உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் பிரிவுகளின் தரவுகளும் பட்டியலிடப்பட்டுள்ளன.

Facial-Recognigtion-Investigation-Facts

எனினும், அடையாளம் காணப்பட்டவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களா, குற்றவாளிகள் என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டவர்களா அல்லது குற்ற வழக்குகளில் பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டவர்களா என்பது குறித்து இந்தப் பிரமாணப் பத்திரத்தில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. பிரமாணப் பத்திரத்தின்படி, “கடுமையான குற்றங்களை எதிர்கொள்பவர்களின் முகம் மற்றும் பிற தகவல்கள் மட்டுமே காவல்துறை பதிவுகளில் இருக்கும்; போக்குவரத்து அபராதம் அல்லது சிறிய அளவிலான விதிமீறல்கள் போன்ற குற்றங்களுக்கான தகவல்கள் இதில் இருக்காது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முக அடையாளம் காணும் அமைப்பின் முடிவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. குற்றப் பின்னணி கொண்ட ஒருவர் கூட்டத்தில் இருக்கிறாரா என்பதைக் கண்டறிவதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக மட்டுமே இந்த அமைப்பு பயன்படுத்தப்படுகிறது. அந்த முகம் அடையாளம் காணப்பட்ட பிறகு, சம்பந்தப்பட்ட நபர் குறித்து கள அளவில் சரிபார்ப்பு மேற்கொள்ளப்படும். ஏனெனில், அந்த நபரின் விவரங்கள் ஏற்கனவே காவல்துறை பதிவுகளில் இருக்கும். களச் சரிபார்ப்பின்போது அவர் உண்மையில் அந்த இடத்தில் இருந்தது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்க்பபட்டுள்ளது.

Source link