சமீபத்தில் தவெக சட்டமன்ற உறுப்பினரான கனிமொழி சந்தோஷ், முதல்வர் விஜய்தான் அடுத்த பிரதமர். அவரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியே பிரதமர் நாற்காலியில் அமர வைப்பார் என பேசியிருந்தார். இந்நிலையில் விஜய் பிரதமர் வேட்பாளரா களமிறங்குவாரா என்ற கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் ஒன்றை அளித்துள்ளார்.
சமீப காலமாக பிரதமர் வேட்பாளர் தொடர்பான பேச்சுக்கள் தமிழக அரசியலில் மிகப்பெரிய அளவில் வெடித்துள்ளன. தவெகவினர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் எனவும், காங்கிரஸ் கட்சியினர் அடுத்த பிரதமர் ராகுல் காந்திதான் எனவும் தொடர்ச்சியாக கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரிய வாதமாக மாறியுள்ளது. இந்நிலையில் விஜய் பிரதமர் வேட்பாளரா என்ற கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் அளித்துள்ள பதில் கவனம் பெற்று வருகிறது.
Source link
