'மாஜி' எம்.எல்.ஏ., விவகாரத்தில் சபாநாயகர் விரைவில் முடிவு

சென்னை: அ.தி.மு.க.,வில் இருந்து, எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு, த.வெ.க.,வுக்கு தாவிய இசக்கி சுப்பையா, தன் ராஜினாமாவை திரும்ப பெறுவதாக கடிதம் அளித்தார்.

அது குறித்து, சட்டசபை கூட்டத் தொடர் முடிந்த பின் முடிவு அறிவிப்பதாக, சபாநாயகர் பிரபாகர் தெரிவித்தார்.

சபாநாயகர் நேற்று அளித்த பேட்டி: சபாநாயகராக நான் சிறப்பாக செயல்படுகிறேன் என்றால், இந்த பொறுப்பில் என்னை அமர வைத்த முதல்வருக்கு தான், அந்த பெருமை சேரும்.

அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ., இசக்கி சுப்பையா, தன் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தற்போது, அதை திரும்ப பெறுவதற்கான கடிதத்தை வழங்கினார். அந்த கடிதம், எனது ஆய்வில் உள்ளது. சட்டசபை முடிந்த பின் முடிவு அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Source link