இன்றைய காலக்கட்டத்தில் சினிமா என்பது தியேட்டரில் சென்று பார்ப்பதை விடவும், வீ்ட்டில் இருந்து பார்ப்பதையே மக்கள் பலரும் விரும்புகின்றனர். இதற்கு முக்கிய காரணம் ஒடிடி ப்ளாட்பார்ம்கள் என்று சொல்லலாம். வார இறுதி வந்துவிட்டாலே, பலரும், ஒடிடி தளத்தில் என்ன புதிய படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது என்று தேட தொடங்கி விடுவார்கள். அந்த வரிசையில், இந்த வாரம் என்னென்ன படங்கள் பார்க்கலாம்? 2026-ல் வெளியான த்ரில்லர் படங்கள் சிலவற்றை பார்பபோம்.
எம்.4எம். (மோட்டீவ் ஃபார் மர்டர்) (M4M: Motive for Murder)
தெலுங்கில் வெளியான க்ரைம் திரில்லர் திரைப்படம் மோட்டீவ் ஃபார் மர்டர். தொடர் கொலைகளை செய்து வரும் சீரியல் கில்லர், அவரை பிடிக்க காவல்துறை தரப்பில் எடுக்கும் நடவடிக்கைகளை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம், ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்பான சம்பவங்களுடன் அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். இந்த படத்தை அமேசான் பிரைம் வீடியோ ஓடிடியில் பார்க்கலாம்.
த்ரிடம் (Dridam)
மலையாளத்தில் வெளியான மற்றொரு தரமான க்ரைம் திரில்லர் திரைப்படம் ‘ த்ரிடம்’. ஒரு காவல்நிலையத்திற்கு புதிதாக வரும் சப் இன்ஸ்பெக்டர், அவர் வந்தபிறகு அந்த பகுதியில் நடக்கும் தொடர் கொலை சம்பவங்கள், இதை காவல்துறை எப்படி தடுத்தது? இறுதியில் கொலை செய்தது யார் என்ற பரபரப்பான ட்விஸ்டுடன் திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம், பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி யூகிக்க முடியாத அளவுக்கு இருக்கும் இந்த படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்கலாம்.
பாலன்: தி பாய் (Balan: The Boy)
மலையாளத்தில் வெளியான மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் ‘பாலன்: தி பாய்’. ஐ.எம்.டி.பி-யில் 8.0 ரேட்டிங் பெற்றுள்ள இந்த படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மர்மமும் திரில்லும் நிறைந்த இப்படத்தை ஜீ5 ஓடிடியில் பார்க்கலாம். ஜனநாயகன் படத்தை தயாரித்த கே.வி.என்.நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது
நியூட்டன் 3 லா (Newton’s 3rd Law)
தெலுங்கில் வெளியான க்ரைம், மிஸ்ட்ரி மற்றும் திரில்லர் திரைப்படம் நியூட்டன் 3 லா. சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், ஐ.எம்.டி.பி-யில் 7.5 ரேட்டிங் பெற்றுள்ளது. மர்மமான சம்பவங்களுடன் நகரும் இந்த த்ரில்லர் திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் பார்க்கலாம்.
காளிதாஸ் 2
தமிழில், பரத் மற்றும் பவானி ஸ்ரீ நடிப்பில் வெளியான க்ரைம், மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் ‘காளிதாஸ் 2’. 90-எஸ் நடிகை சங்கீதா முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படம், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. பரபரப்பான திருப்பங்களுடன் நகரும் இந்த திரில்லர் திரைப்படத்தை அமேசான் பிரைம் வீடியோ ஓடிடியில் பார்க்கலாம்.
