டில்லியில் கனமழையால் கடும் போக்குவரத்து நெருக்கடி: பயணிகளுக்கு விமான நிறுவனங்கள் முக்கிய அறிவிப்பு

புதுடில்லி: டில்லியில் பெய்து வரும் கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகள் போக்குவரத்து நெருக்கடியால் முடங்கியது. விமான போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

தலைநகர் டில்லியில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இடைவிடாத மழை காரணமாக நகரின் பல பகுதிகளில் சாலைகளிலும், தெருக்களிலும் மழைதண்ணீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

கன்னாட் பிளேஸ் பகுதியில், சாலை நெடுகிலும் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. அங்குள்ள கடைகள், வணிக நிறுவனங்களிலும் மழைதண்ணீர் புகுந்தது. நொய்டா, கிரேட்டர் நொய்டாவிலும் மழையின் தாக்கம் மக்களை பாதிப்புக்கு ஆளாக்கியது.

மழையின் எதிரொலியாக விமான போக்குவரத்திலும் தாமதம் ஏற்பட்டது. பல்வேறு விமான நிறுவனங்கள் தங்கள் பயணிகளுக்கு என்று பிரத்யேக அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கின்றன.

இண்டிகோ, ஏர் இந்தியா விமான நிறுவனங்கள், விமானங்கள் புறப்பாடு மற்றும் வருகையில் தாமதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பயணிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. சாலைகளில் நீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால் விமான நிலையம் புறப்படும் முன்பாக விமானத்தின் புறப்பாடு மற்றும் வருகை விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்று விமான நிறுவனங்கள் அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளன.

Source link