பாவனா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கிரிஷ் ஏ. டி. இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’. இதில் சங்கீத் பிரதாப், சுரேஷ் கிருஷ்ணா, வினய் ஃபோர்ட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். திலீஷ் போத்தன், ஃபகத் ஃபாசில், சியாம் புஷ்கரன் உள்ளிட்டோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். விஷ்ணு விஷய் இசையமைத்துள்ளார். மலையாளத்தில் உருவான இப்படம் கேரளாவில், கடந்த மாதம் 21ஆம் தேதி வெளியானது.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் ரூ. 200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் செப்டம்பர் 4ஆம் தேதி வெளியானது. அங்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகத் தகவல். இந்த நிலையில் இப்படக்குழுவினர் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.
சென்னையில் இப்படத்தின் விளம்பரப்படுத்துவதற்காக வந்திருந்து படக்குழுவினர் செய்தியாளர் சந்திப்பை முடித்து விட்டு கமல்ஹாசனை அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். அப்போது கமல் படம் வெற்றி பெற்றது தொடர்பாக தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இதில் பட நாயகர்கள் நிவின் பாலி, மமிதா பைஜூ கலந்து கொள்ளவில்லை. மற்றபடி தயாரிப்பாளர் ஃபகத் ஃபாசில், இயக்குநர் கிரிஷ் ஏ.டி. உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். கமலின் வாழ்த்து படக்குழுவினருக்கும் படத்துக்கும் நல்ல வெளிச்சம் கிடைத்துள்ளது.
