சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 14,360 ரூபாய்க்கும், சவரன், 1,14,880 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 255 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 170 ரூபாய் குறைந்து, 14,190 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,360 ரூபாய் சரிவடைந்து, 1,13,520 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
