தீபாவளி ரயில் டிக்கெட்; சில நிமிடங்களிலேயே ஏமாற்றமடைந்த பயணிகள்!

இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 8ஆம் தேதி நாடு முழுவதும் உற்சாகமாக மக்கள் கொண்டாட உள்ளனர். இந்த தினத்தை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்ள தயாராகியுள்ளனர். குறிப்பாக தீபாவளி வார விடுமுறையான ஞாயிற்றுகிழமையில் வருவதால் பலரும் முன்கூட்டியே பயணம் மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளனர்.

அதில், பயணிகள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான நடைமுறை என்பது 60 நாட்களுக்கு முன்னதாக ஐ.ஆர்.சி.டி.சி தொடங்கி பின்பற்றி வருகிறது. அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 5ஆம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (06-09-26) காலை 8 மணிக்குத் தொடங்கியது. அதில் ஏராளமானோர் முன்பதிவு செய்ய முயன்றால் இணையதளம் முடங்கப்பட்டது. 1 நிமிடத்திற்கு ஒன்றரை லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யக்கூடிய வகையில் சமீபத்தில் டிக்கெட் புக்கிங்கை ரயில்வே மேம்படுத்தியிருந்தது.

இப்படிப்பட்ட சூழலில், தீபாவளி பண்டிகைக்கு ஏராளமானோர் இன்று காலை முதலே டிக்கெட் முன்பதிவௌ செய்ய முயன்றால் இணையதளம் முடங்கியது. இதன் காரணமாக பலருக்கும் டிக்கெட் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட் தீர்ந்தது. இதனால் ஏராளமான பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். இன்றைய தினம் டிக்கெட் கிடைக்காதவர்கள், நவம்பர் 6ஆம் தேதிக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்கு நாளை (07-09-26) முன்பதிவு செய்ய திட்டமிட்டுள்ளனர். 

Source link