உணவுப் பொருள்களுக்கு பதிலாகப் பணம்; அரசின் திட்டத்தில் ரூ.5.7 கோடி மோசடி

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் மஞ்சித் சிங் பேடி. இவர் அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள டாகோமா நகரில் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வந்தார்.

அங்கு, அமெரிக்க அரசின் ஏழை, எளிய மக்களுக்கான உணவு மற்றும் ஊட்டச்சத்து திட்டப் பயனாளர்களின் நலத்திட்ட அட்டைகளைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு உணவுப் பொருள்களை வழங்காமல், அதற்குப் பதிலாகப் பணத்தை வழங்கியுள்ளார். மேலும், அதில்  பாதி பணத்தை வாடிக்கையாளர்களிடம் கமிஷனாக பெற்று வந்துள்ளார். இவ்வாறு 6 லட்சம் டாலர் (ரூ.5.7 கோடி) அளவிலான மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து, அமெரிக்காவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதும் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க, அவர் அந்நாட்டிலிருந்து வெளியேறிவிட்டார். பின்னர், கனடா வழியாக இந்தியாவிற்குத் தப்பி வந்துள்ளார். அப்போது,  அவரை காவல் துறையினர் கைது செய்தனர் என்றனர்.

இது குறித்து, அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. அமைப்பின் சார்பில், ”மன்ஜீத் சிங் பேடி அமெரிக்கர் ஆவார். அவரை நிதி மோசடி தொடர்பாகத் தேடி வந்தோம். தற்போது, இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை இந்தியாவில் இருந்து அமெரிக்கா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது”  என்று தெரிவித்துள்ளது.   

Source link