’லிவ்-இன்’ உறவில் விபரீதம்; இளைஞருக்கு நடுரோட்டில் பாடம் கற்பித்த காவல்துறை

குஜ​ராத் மாநிலம், பாவ்​நகரைச் சேர்ந்தவர் ஃபைசல் (20). இவர் காஜல்​பன் பரையா (40) என்ற பெண்​ணுடன் கடந்த சில ஆண்​டு​களாக ‘லிவ்​-இன்’ முறை​யில் வாழ்ந்து வந்​தார். இதனிடையே, இவர்களுக்குள் சந்தேகம் உள்ளிட்ட காரணங்களால் கருத்துவேறுபாடு  இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த செப்டம்​பர் 3 அன்று, பிற்​பகல் நேரத்தில் பாவ்​நகர் பேருந்து நிலை​யத்​தில் காஜல்​பன் தனது நண்​பர் ரவி என்​பவருடன் நின்று கொண்​டிருந்​தார். அப்போது, அங்கு வந்த ஃபைசல் காஜல்பன்னுடன் வாக்கு​வாதத்தில் ஈடுபட்டார். கள்​ளத்​தொடர்பு சந்​தேகம் மற்​றும் மது அருந்து​வது தொடர்​பான தகராறில் ஆத்​திரமடைந்த ஃபைசல், காஜல்​பனை கொடூர​மாக தாக்​கியுள்ளார்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர் ரவி, தாக்குதலைத் தடுக்க முயன்ற போது அவரும் கடுமையாகத் தாக்கப்பட்டார். மிகக் கொடூரமான இந்த தாக்குதலில், படுகாயமடைந்த காஜர்பன், அங்கிருந்தவர்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி கடந்த செப்டம்பர் 4 அன்று உயிர் இழந்தார். இதனைத்தொடர்ந்து, காஜர்பனின் அம்மா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், ஃபைசலை கைது செய்தனர்.   

அவரிடம், தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, செப்டம்பர் 5 அன்று சம்பவம் நடந்த முறையை ஆய்வு செய்வதற்காக, காவலர்கள் ஃபைசலை மீண்டும் சம்பவம் நடந்த விதத்தை நடித்துக் காட்டச் செய்தனர். அப்போது, பொதுமக்கள் நிறைந்த இடத்தில் ஃபைசலை காவல்துறையினர் சூழ்ந்துகொண்டு லத்தியால் சரமாரியாகத் தாக்கினர். இது சம்பந்தமான காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.  

சமூக வலைத்தளத்தில் வைரலான அந்தக் காணொளி, இணையத்தில் கடுமையான விவாதத்தைத் தூண்டியுள்ளது. பலர் காவல்துறையின் இந்த நடவடிக்கையை ஆதரிது வருகின்ற்னர். குறிப்பாக, குற்றத்தில் ஈடுபடும் நபர்களுக்கு இது ஒரு நல்ல பாடமாக இருக்க வேண்டும் எனப் பாராட்டி வருகின்றனர். அதே வேளையில், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சட்ட நடைமுறை மற்றும் காவலில் நிகழும் வன்முறை குறித்துக் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.  

Source link