சென்னை: சட்டசபைக்கு இன்று (செப்.7) தவெக பெண் எம்எல்ஏக்கள் அனைவரும், ஒரே வண்ணத்தில் புடவை அணிந்து வந்து, கவனத்தை ஈர்த்தனர்.
சட்டசபையில் இன்று (செப்.7) காவல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு, முதல்வர் விஜய் பதில் அளித்தார். சட்டசபை நிகழ்ச்சிகள் தொடங்கும் முன், தவெக எம்எல்ஏ சத்யபாமா, முதல்வர் விஜய் நெற்றியில் குங்குமம் வைத்து, வாழ்த்து தெரிவித்தார்.
சட்டசபைக்கு பெண் அமைச்சர்கள் கீர்த்தனா, ஜெகதீஸ்வரி, விஜயலட்சுமி, கமலி மற்றும் தவெக பெண் எம்எல்ஏக்கள் பல்லவி, காமாட்சி, சிந்து, கனிமொழி, சத்யபாமா, தமிழ்ச்செல்வி, சத்யா, குழந்தை ராணி ஆகியோர் சிவப்பு, ஆரஞ்சு கலந்தது போன்ற, ஒரே வண்ணத்தில் புடவை அணிந்து வந்தனர்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவும், அதே நிறத்தில் புடவை அணிந்து வந்திருந்தார். இதனால், ‘நீங்களும் எங்கள் பக்கம் வந்து விட்டீர்களா’ என, அவரிடம் அமைச்சர்கள் நகைச்சுவையாக கேட்டனர்.
