”எத்தனை அழுத்தங்கள் இருந்தாலும்…” – முதல்வர் விஜய் குறித்து தந்தை பெருமிதம்

தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மற்றும் மானியக்கோரிக்கைகள் மீதான உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதல்வர் விஜய் பதிலளித்தார். முன்னதாக, மாநிலத்தின்  சட்டம் ஒழுங்கு குறித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் தவெக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தன.   

உறுப்பினர்களின் இந்த கேள்விகள் மற்றும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த முதல்வர் விஜய், தவெக ஆட்சியில் ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் குற்ற  நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.   

எதிர்க்கட்சியினர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்த முதல்வர் விஜய்,  அப்போது 1967ல் அண்ணா, 1977ல் எம்ஜிஆர், 1983ல் என்டிஆர், 2026ல் விஜய் என்றார். மேலும், இயற்கையும், இறைவனும் நம்ம (தவெக)  பக்கம் தான் இருப்பார்கள். அன்புக்கு முன்னாடி எதிரிகள் தோற்பது உறுதி… உறுதி… உறுதி… நாற்காலிக்காக அதிகாரத்திற்காக நான் இங்கு வரவில்லை. மக்களுக்கு நல்லது செய்யவும், நன்றிக் கடன் செய்யவும் மட்டுமே வந்துள்ளேன் என்று பேசியிருந்தார்.  

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முந்தைய ஆட்சிக்காலத்தின் போது நடந்த தவறுகள் தவெக ஆட்சியில் நடக்காது என்றும் அவர் தெளிவாக எடுத்துரைத்தார்.  முதல்வர் விஜயின் அனல் பறக்கும் இந்த பேச்சுக்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் இந்த உரையைப் பாராட்டி வருகின்றனர்.  

இந்நிலையில், பிரபல இயக்குனரும், முதலமைச்சர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் இன்ஸ்டாகிராமில், ”எத்தனை அழுத்தங்கள் இருந்தாலும், அதை எளிதாகக் கையாளும் முதல்வரை சந்தித்தது, ஒரு தந்தையாகப் பெருமைப்பட்ட நேரம்” என்று குறிப்பிட்டுள்ளார்.  

Source link