நிர்வாகிகளின் கோரிக்கை; சம்மதம் தெரிவித்த ரஜினி!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல் 3 வருடத்துக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், 2026 முதல் 2029 காலத்திற்கான தேர்தல் கடந்த ஜூலை மாதம் தொடக்கத்தில் நடைபெறவிருந்தது. ஆனால், சங்கத்தின் தலைவராக இருந்த இயக்குநர் கே.பாக்யராஜ் திடீரென மறைந்ததால் அந்த தேர்தல் அம்மாதம் மத்தியில் நடந்தது. இதில் சேரன் அணியான ‘நம்ம பாக்யராஜ்’ வெற்றி பெற்றது. இதையடுத்து தலைவராக சேரன், பொதுச் செயலாளராக பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளராக ஆர்.சுந்தர்ராஜன்  உள்ளிட்ட  வெற்றி பெற்ற நிர்வாவிகள் புதியதாக பொறுப்பேற்று சங்கத்தை வழி நடத்தி வருகின்றனர்.  

இந்த புதிய நிர்வாகிகள் சமீபத்தில் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும் அவரிடம் ஆலோசனை நடத்தினர். அப்போது சங்கத்தை சிறப்பாக வழிநடத்த அறிவுரை கூறியதாக சொல்லப்படுகிறது. கமலைத் தொடர்ந்து ரஜினிகாந்தை சந்தித்து நிர்வாகிகள் வாழ்த்து பெற்றனர். அப்போது அவரிடம் வள்ளி, பாபா உள்ளிட்ட படங்களில் கதையாசிரியராக பணியாற்றியுள்ளதால் சங்கத்தில் இணையவுள்ளதாக நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று சங்கத்தில் இணைய ரஜினி சம்மதம் தெரிவித்துள்ளார். 

Source link