மாண்போடு நடக்கிறதா என்று கேட்கும் அளவுக்கு நடக்கிறது சட்டசபை; ஸ்டாலின் பேட்டி

சென்னை: சட்டசபை மாண்போடு நடக்கிறதா என்று அந்த கேள்வியை கேட்கும் அளவுக்கு நடந்து கொண்டு இருக்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் பதில் அளித்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்தார்.

கேள்வி: சட்டசபை மாண்போடு நடக்கிறதா? நீங்கள் சட்டசபையில் நெடுநாள் அனுபவம் கொண்டவர், தற்போது மாண்போடு நடப்பதாக பார்க்கிறீர்களா?

ஸ்டாலின் பதில்: நீங்களே கேள்வி கேட்கிறீர்களே? மாண்போடு நடக்கிறதா என்று அந்த கேள்வியை கேட்கும் அளவுக்கு நடந்து கொண்டு இருக்கிறது.

நோ பதில்!

இடைத்தேர்தலில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு, காரின் கண்ணாடியை அடைத்துவிட்டு, அங்கு இருந்து பதில் அளிக்காமல் ஸ்டாலின் புறப்பட்டு சென்றார்.

Source link