உக்ரைன் போரை நிறுத்தும் இந்தியாவின் முயற்சிக்கு ரஷ்யா வரவேற்பு

புதுடில்லி: ரஷ்யா – உக்ரைன் போர் துவங்கி ஐந்து ஆண்டுகளை நெருங்கும் நிலையில், உக்ரைன் போரை நிறுத்த இந்தியா மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் வரவேற்பதாக, ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார்.

கடந்த 2021 அக்டோபரில் ரஷ்யா – உக்ரைன் இடையே போர் ஏற்பட்டது. உக்ரைன் நேட்டோ எனப்படும் சர்வதேச ராணுவ அமைப்பில் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா தாக்குதலை துவங்கியது.

இந்த போரை முடிவுக்கு கொண்டு வரவும், பேச்சு நடத்தி தீர்வு காணவும் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், செப்., 11ம் தேதி இந்தியா வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார். இதற்கு முன்னதாக, உக்ரைன் போர் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளது.

ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், இந்திய பத்திரிகையாளர்களுடன் இணையவழியில் பேசியதாவது:

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா பங்களிக்க விரும்புவதை வரவேற்கிறோம். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முயற்சிகளையும் வரவேற்கிறோம். உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு எங்களுக்கு தெரியும்.

பேச்சு மற்றும் அமைதி வழியில் உக்ரைன் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பதில், இந்தியாவின் நிலைப்பாட்டுடன் எங்களது நிலைப்பாடு பெருமளவில் ஒத்துப்போகிறது. இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட ரஷ்யா தயாராக உள்ளது.

பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கு முன்னதாக 11ம் தேதி டில்லி வரும் ரஷ்ய அதிபர் புடினை பிரதமர் மோடி சந்தித்து பேச்சு நடத்த உள்ளார். இந்த சந்திப்பில், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link