நெருங்கி வரும் தீபாவளி பண்டிகை; விமான கட்டணம் இரு மடங்கானது

புதுடில்லி: நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், அதை ஒட்டிய தினங்களில் முக்கிய உள்நாட்டு விமான வழித்தடங்களில் 7,000 ரூபாயாக இருந்த கட்டணம் 15,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.

அக்., 12 முதல் 18 வரை நவராத்திரி காலத்தில் மும்பை – கொல்கட்டா ஒரு வழி விமான கட்டணம், ஒருவருக்கு 16,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. வழக்கமாக இந்த வழித்தடத்தின் கட்டணம் 8,000 ரூபாய்க்குள் இருக்கும்.

டில்லி – மும்பை விமான கட்டணமும் உயர்ந்துள்ளது. வழக்கமாக 6,500 ரூபாயாக இருக்கும் இந்த வழித்தடத்தின் கட்டணம், பண்டிகை நாட்கள் வரும் அக்டோபர், நவம்பரில் 10,000 ரூபாயாக உள்ளது.

முக்கிய நகரங்களுக்கான நேரடி விமான டிக்கெட்டின் விலை 25,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

Source link