மத்திய அமைச்சருடன் அமைச்சர் ராஜிவ் சந்திப்பு

சென்னை : மத்திய எரிசக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்கை, சென்னையில் நேற்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜிவ், மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், வனத்துறை செயலர் காகர்லா உஷா, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் அனுராக் மிஸ்ரா, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை இயக்குநர் ஆஷா அஜித், மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் அலர்மேல்மங்கை ஆகியோர் உடன் இருந்தனர்.

Source link