காத்மாண்டு: திடீர் வெள்ளத்தில் 1,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் நேபாளத்தில் 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து வடமேற்கே 375 கி.மீ., தொலைவில் உள்ள லோமன்தாங் பகுதியை மையமாக கொண்டு இரவு இந்திய நேரப்படி இரவு 9:38 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.3 ஆக பதிவாகி உள்ளதாக அந்நாட்டு தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
பூமிக்கு அடியில் 143 கி.மீ. ஆழத்தில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்துகொண்டிருக்கும் வேளையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
1,300க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்து, ஆயிரக்கணக்கானோரைக் காணாமல் போகச் செய்த பேரழிவுகரமான திடீர் வெள்ளப்பெருக்குகளின் பின்விளைவுகளுடன் நாடு தொடர்ந்து போராடி வரும் வேளையில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
