“திமுக வீ மிஸ் யூ, கிளம்பி வாங்க சண்டை போடலாம்…”

தமிழக சட்டப்பேரவையில்  கடந்த 1 மாத காலமாக நடைபெற்று வந்த  பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நிதிநிலை அறிக்கை, வேளாண் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு பல்வேறு அறிவிப்புகள் வெளியானது. அதனைத் தொடர்ந்து அந்த அறிக்கைகள் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது.

இதையடுத்து கேள்வி நேரம், கவன ஈர்ப்பு தீர்மானம், துறைகள் ரீதியான மானியக் கோரிக்கை ஆகியவை தாக்கல் செய்யப்பட்டு தவெக – திமுக இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. 1 மாதத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த கூட்டத்தொடரின் போது பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று அனைவரையும் கவனத்தையும் ஈர்த்தது.

இந்த நிலையில், இந்தாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (08-09-26) மாலையுடன் நிறைவடைந்தது. அப்போது பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “கல்லூரியில் ஃபேர்வெல் டே மாதிரி இந்த கூட்டத்தொடருடைய கடைசி நாள் என்பது எங்களுக்கு கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. சபாநாயகரை விட்டு போவதற்கு வருத்தமாக இருக்கிறது. நான் காலேஜ் படித்துக் கொண்டிருந்த காலத்தில் சைக்கிளில் இந்த சட்டமன்றத்துக்கு வெளியே நின்று எப்போது இங்கு வருவோம் என்று ஒரு சிந்தனை இருக்கும். ஏனென்றால் ஒரு பெரிய பின்புலம் கிடையாது. ஆனால் அரசியல் தான் என ஒரு குறிக்கோளுடன் வரும் போது எங்களுடைய முதல்வர் தனது பிரச்சாரத்தின் மூலம் ஆளுங்கட்சியாக இருந்து இதே அவையில் ஒரு சட்டமன்ற உறுப்பினராகவும் ஒரு அமைச்சராகவும் அமர்ந்திருக்கிறேன். எங்களுக்கு உள்ளபடியே ஒரு முக்கியமான காலகட்டத்தில் நாங்கள் இருக்கிறோம்.

நிறைய கற்றுக் கொண்டிருக்கிறோம். ஒரு அமைச்சராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் ஒவ்வொரு திட்டம் எடுக்கும் பொழுது எப்படி வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும் என்று கற்றுக் கொண்டிருக்கிறோம். முதல்வருடைய வெற்றி தேர்தல் வெற்றி மட்டுமல்ல, சாமானியனின் வெற்றி. அதிகபட்சம் 5 கோடி மக்கள் இன்றைக்கு சட்டமன்ற விவாதங்களில் பங்கு பெறுகிறார்கள். இது தான் ஜனநாயகம், இது தான் வெளிப்படைத்தன்மை. இந்த வெளிப்படைத்தன்மையை உருவாக்கிய தவெக சார்பாக, இங்கு இருக்கக்கூடிய அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், பா.ம.க, ஐ.யூ.எம்.எல், எங்களுக்கு ஆதரவு கொடுத்த அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் எங்களை நன்றி தெரிவிக்கிறோம். ஏன் எங்களை எதிர்த்து நின்று கேள்வி கேட்ட திமுகவை நாங்கள் மிஸ் பண்றோம். நேற்று இரண்டு நாட்கள் தான் வரவில்லை, மற்ற எல்லா நாட்களிலும் 7 மணி வரைக்கும் எங்களுடன் இருந்தார்கள்.  எதிர்கட்சிகளை எதிரியாக பார்க்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. இது கடைசி நாள் இல்லை, இது தான் ஆரம்பம். சீக்கிரமே சட்டசபையை கூட்டுங்கள். அதனால் திமுக, வி மிஸ் யூ (we miss you) கிளம்பி வாங்க சண்டை போடலாம், மக்களுக்காக…” என்று பேசினார். 

Source link