லட்சக்கணக்கணக்கில் குவியும் மக்கள்; களைக்கட்டும் லாட்டரி விற்பனை

கேரள மாநிலத்தில், ஓணம் பண்டிகையையொட்டி பம்பர் லாட்டரிச் சீட்டை அரசு அறிவித்தது. இதில், கடந்த முறையைப் போல் அல்லாமல், பரிசுத்தொகையும் அதிகரிக்கப்பட்டிருந்தது. இது மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அந்த வகையில், இந்தாண்டு ’முதல் பரிசாக ரூ. 30 கோடி’ அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், லாட்டரி சீட்டின் விலையும் ரூ. 500க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இந்த லாட்டரி சீட்டின் விற்பனை கடந்த மாதம் தொடங்கியது. இந்நிலையில், கடைகளுக்கு லாட்டரி சீட்டுகள் வந்த முதல் நாளில் இருந்தே விற்பனை அமோகமாக இருந்தது. நேற்று முன்தினம் வரை கிட்டதட்ட 59 லட்சம் லாட்டரி சீட்டுகள் விற்பனையாகி உள்ளன. இந்நிலையில், லட்சக்கணக்கணக்கான மக்கள் லாட்டரி சீட்டுகளை வாங்கியுள்ளது கவனம் பெற்றுள்ளது. இதன்மூலம், கேரள அரசுக்கு இதுவரை ரூ. 230 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்துள்ளது. இதில், பரிசுத் தொகையாக மொத்தம் ரூ. 125.54 கோடி வழங்கப்படும்.

அதே போல, லாட்டரி ஏஜென்சி கமிஷனுக்காக ரூ.12.55 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் இறுதியில், அதாவது வரும் செப்டம்பர் 26ம் தேதி லாட்டரி குலுக்கல் நடைபெற உள்ளது. அன்று மதியம் வரை லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறும். வழக்கமாகக் கடைசி ஒரு சில நாட்களில் தான் லாட்டரி சீட்டின் விற்பனை மேலும் அதிகரிக்கும் எனக்கூறப்படுகிறது. லாட்டரி குலுக்கலுக்கு இன்னும் 17 நாட்கள் இருப்பதால் ’ஓணம் பம்பர் லாட்டரி’ விற்பனை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. லாட்டரி சீட்டுகளை வாங்க நாளுக்கு நாள் மக்கள் குவிந்து வருவதால், மேலும் அரசுக்குப் பெரிய அளவிலான வருமானம் கிடைக்கும் எனக் கருதப்படுகிறது.   

Source link