இடைத்தேர்தலில் களமிறங்கும் திமுக; வேட்பாளர்களை அறிவித்த மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தில் மொத்தமாக ஏழு தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற  மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இந்த இரண்டு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு வரும் செப்டம்பர் 16ஆம் வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், வேட்புமனுத் தாக்கல் இன்று இன்று (09-09-26) தொடங்கியுள்ள நிலையில், திமுக, தவெக, அதிமுக, நாதக உள்ளிட்ட கட்சிகள் தீவிர முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இந்த தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவரும் மு.க.ஸ்டாலின் வேட்பாளர்களின் பெயர்களையும் அறிவித்துள்ளார். இது குறித்து மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது, ‘ வருகிற 06-10-2026 அன்று நடைபெற உள்ள மதுராந்தகம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் வழக்கறிஞரும் திமுக சட்டத்துறை இணைச் செயலாளருமான ஐ.பரந்தாமனும், தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் வழக்கறிஞரும் மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளருமான எஸ். சுகன்யாவும் கழக வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2021ஆம் சட்டமன்றத் தேர்தலில் எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பரந்தாமனுக்கு, 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை. இந்த சூழலில் மதுராந்தகம் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அவர் போட்டியிட திமுக வாய்ப்பளித்துள்ளது. 

Source link