தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் : தி.மு.க. வேட்பாளர் அறிவிப்பு!

புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி, தனது தட்டாஞ்சாவடி தொகுதி பதவியை ராஜினாமா செய்தார்.இதையடுத்து அந்த காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (09.09.2026) தொடங்கியது. 

அதன்படி செப்டம்பர் 16ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 17இல் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, மனுக்களைத் திரும்பப் பெறச் செப்டம்பர் 19ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வரும் அக்டோபர்  மாதம் 6ஆம் தேதி  வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் பதிவான வாக்குகள் அக்டோபர் 9 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளன. 

இத்தகைய சூழலில் தான்  இத்தேர்தலில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ அசோக் ஆனந்த் போட்டியிடுவார் என முதல்வர் ரங்கசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராகச் சேது என்கிற சேது செல்வம் போட்டியிடுவார் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

Source link