தமிழகத்தில் 1,626 பள்ளிகளில் குடிநீர் இணைப்பு இல்லை!

சென்னை: ‘தமிழகத்தில் 1,626 பள்ளிகள், 6,444 அங்கன்வாடிகளுக்கு, குடிநீர் குழாய் இணைப்பு இல்லை’ என, மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது: அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும், 2024ம் ஆண்டுக்குள், குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதே, ‘ஜல்ஜீவன் மிஷன்’ திட்டத்தின் நோக்கம். இத்திட்டம் 2028ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023 – -24ம் ஆண்டு வரை, தமிழகத்தில் 81.87 சதவீத கிராமப்புற வீடுகளுக்கு, குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனால், பெண்களின் வேலைப்பளு குறைந்துள்ளது. பாதுகாப்பான குடிநீர் கிடைத்ததால், நீர் வழியாக பரவும், வாந்தி, வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, காலரா போன்ற நோய்கள் குறைந்துள்ளதாக, பயனாளிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் 1,626 ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள், 6,444 அங்கன்வாடிகளுக்கு, குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படவில்லை என, 2024 அக்டோபரில் திட்ட இயக்குநர் தெரிவித்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link